/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்த மைசூரின் 4 வயது சிறுமி
/
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்த மைசூரின் 4 வயது சிறுமி
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்த மைசூரின் 4 வயது சிறுமி
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்த மைசூரின் 4 வயது சிறுமி
ADDED : ஏப் 13, 2025 06:43 AM

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன என்றால் பொருள் சிறியதாக இருந்தாலும் ஆற்றல் அல்லது வலிமை குறையாது என்பது தான். இந்த பழமொழி இன்றைய நவீனகால குழந்தைகளுக்கு நன்கு பொருந்துகிறது. பெரியவர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட குழந்தைகளுக்கு தெரிகிறது.
முன்பு எல்லாம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பெறுவது பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்த காலகட்ட குழந்தைகள் தங்களது அறிவாற்றல் மூலம் சர்வசாதாரணமாக இடம்பிடித்து விடுகின்றனர்.இவர்களில் ஒருவர் சலோமி ஸ்துதி.
மைசூரின் காயத்ரி புரத்தில் வசிப்பவர் ஜான் திவ்யா. இவரது மகள் சலோமி ஸ்துதி. இவருக்கு வயது 3 ஆண்டுகள் 10 மாதம்.
இவருக்கு இருக்கும் அற்புதமான நினைவாற்றலால் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம்பிடித்து உள்ளார்.
நமது நாட்டில் உள்ள மாநிலங்கள், அதன் தலைநகரங்கள், அமெரிக்காவின் 50 மாநிலங்களின் பெயர்களை கூறுகிறார்.
ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை தமிழ், ஆங்கிலம், கன்னடா உட்பட 7 மொழிகளில் கூறுகிறார். எட்டு கிரகங்கள், ஏழு கண்டங்களின் பெயர்களை சொல்லி அசத்துகிறார்.
இதுபற்றி சலோமியின் தாய் ஜான் திவ்யா கூறுகையில், '' மூன்று வயது 10 மாதங்களில் சலோமி ஸ்துதி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம்பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருக்கு இருக்கும் நினைவாற்றலை எனது மைத்துனி தான் முதலில் கண்டறிந்தார். வக்கீலாக உள்ள அவர் வேலை முடிந்து வந்ததும், சலோமிக்கு மாநிலங்களின் பெயர்கள், தலைநகரங்கள், எண்களை சொல்லி கொடுத்தார்.
''தமிழ், ஆங்கிலம், கன்னடா, ஹிந்தியை சலோமி சரளமாக பேசுகிறார். எங்களது கூட்டு குடும்பம். எட்டு பேர் உள்ளோம். அனைவரும் தங்களுக்கு தெரிந்ததை சொல்லி கொடுக்கின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும் என்று சலோமிக்கு ஆசை உள்ளது. அதை நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்,'' என்றார்.
- நமது நிருபர் -

