/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
போர்வெல் பழுது பார்ப்பு தொழிலாளி விவசாயத்தில் லாபம் ஈட்டுகிறார்
/
போர்வெல் பழுது பார்ப்பு தொழிலாளி விவசாயத்தில் லாபம் ஈட்டுகிறார்
போர்வெல் பழுது பார்ப்பு தொழிலாளி விவசாயத்தில் லாபம் ஈட்டுகிறார்
போர்வெல் பழுது பார்ப்பு தொழிலாளி விவசாயத்தில் லாபம் ஈட்டுகிறார்
ADDED : ஏப் 13, 2025 06:46 AM

போர்வெல் பழுது பார்த்தல் தொழிலாளியாக இருந்து கொண்டே, தனது நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விவசாயி குட்டப்பா திகழ்கிறார்.
கதக் மாவட்டத்தின் ஹோலேஇட்டகி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குட்டப்பா அம்பிகேரா. போர்வெல் பழுது பார்த்தல் தொழிலாளியாக இருந்தாலும், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு, இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
பாக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தனது நிலத்தில் 450 நாற்றுகளை நட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டவை, இந்தாண்டு பலன் தர துவங்கி உள்ளன.
இதில், ஒரு அடி நிலத்தை கூட வீணாக்காமல், தென்னை, ஆப்பிள், மா, கொய்யா, ஆரஞ்சு, பலாப்பழ மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
தோட்டத்தின் நடுவில் நட்டுள்ள 60 ஆப்பிள் மரக்கன்றுகள், விஜயபுராவில் இருந்து கொண்டு வரப்பட்டதாம். ஆப்பிள் மரத்திற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது. ஆனால், பாக்கு, வாழை மர நிழலால், ஆப்பிள் மர வளர்ச்சி குறைந்து உள்ளது.
எனவே, வாழைப்பழ மரங்களை அகற்றிவிட்டார். தற்போது ஆப்பிள் அறுவடைக்காக காத்திருக்கிறார்.
ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவரின் கிராமத்தில் சோளம், தினை உமியை வாங்கி, தோட்டம் முழுதும் போட்டுள்ளார். அதன் மீது உரம் கலந்த மண்ணை பரப்புகிறார். இதனால் தாவரங்களுக்கு வளமான கரிம உரம் கிடைக்கிறது.
மரக்கன்றுகள் நட்ட முதல் ஆண்டில், 70,000 ரூபாய் வரை லாபம் ஈட்டினார். இதனால் விவசாயி குட்டப்பா, தோட்ட பாதுகாப்புக்காக நான்கு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார்.
ஒரு நபருக்கு ரூ.300
ரசாயன உரத்தால் விளைச்சல்கள் பாதிக்கப்படுவதை பல இடங்களில் பார்த்துள்ளேன். உடல் ஆரோக்கி யத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே தான், இயற்கை விவசாயத்தில் ஈடு பட்டேன். தோட்டத் தில் வேலை செய்ய, கூலி தொழிலாளர் களை அமர்த்துவது அவசியம். தற்போது, ஒரு நபருக்கு 300 ரூபாய் வழங்கப்படு கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும்.
குட்டப்பா அம்பிகேரா,
விவசாயி.
- நமது நிருபர் -

