/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சாக்லேட் தயாரிப்பில் தம்பதி சாதனை
/
சாக்லேட் தயாரிப்பில் தம்பதி சாதனை
ADDED : ஜூலை 12, 2025 11:06 PM

ஆனால் உண்மையான ஆர்கானிக் உணவுப்பொருட்களை விற்கும், நேர்மையான வியாபாரிகளும் உள்ளனர். இவர்களில் பால சுப்பிரமணியா, ஸ்வாதி தம்பதியும் அடங்குவர். பால சுப்பிரமணியா மென் பொறியாளர்.
இவரது மனைவி ஸ்வாதி, எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டதாரி. தட்சிணகன்னடா, புத்துாரை சேர்ந்த இவர்கள், பல ஆண்டுகள் பெங்களூரின் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றினர்.
தரமற்ற பொருள்
இவர்களும் கூட, வெளிப்பார்வைக்கு ஆர்கானிக் என, கூறப்பட்ட தரமற்ற உணவு பொருட்களை வாங்கினர். காலப்போக்கில் இவற்றின் தரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது போன்ற பொருட்கள் வாங்குவதை நிறுத்தினர்.
கடந்த 2020ல், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. மக்களை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டது. இவ்வேளையில் வீட்டில் இருந்த பால சுப்பிரமணியா, ஸ்வாதிக்கு சொந்தமாக தொழில் துவங்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் ஐ.டி., நிறுவன பணியை விட்டு விலகினர். தங்கள் சொந்த ஊரான புத்துாருக்கு திரும்பினர். சாக்லேட் தயாரிப்பு தொழிலை துவக்கினர்.
தங்களின் விவசாய நிலத்தில், இயற்கையான முறையில் விளைவித்த கோகோ, பேரீச்சம் பழம் மற்றும் வெல்லம் பயன்படுத்தி, ஊட்டச்சத்தான சாக்லேட் தயாரித்தனர். சிறிய அளவில் துவங்கிய சாக்லேட் தொழில், இன்று பெரிய அளவில் வளர்ந்து 'பிராண்ட்' ஆகியுள்ளது. இந்த தொழிலால் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தினமும் 300 முதல் 500 கிலோ சாக்லேட் தயாரிக்கின்றனர். இவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சளி பிரச்னை
இது தொடர்பாக, சுப்பிரமணியா கூறியதாவது:
எங்கள் பிராண்ட் சாக்லேட்டுக்கு, 'அனுத்தமா' என, பெயர் சூட்டியுள்ளோம். உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்து, ரசாயனம் கலக்காத சுத்தமான சாக்லேட் தயாரிக்கிறோம். வெல்லம், இஞ்சி, மிளகு பயன்படுத்தி, டார்க் சாக்லேட் தயாரிக்கிறோம். இனிப்பும், காரமும் கலந்திருக்கும். சளி பிரச்னையை குணப்படுத்தும். எங்களின் சாக்லேட்டுக்கு, சர்வதேச அளவில் விருதுகள் கிடைத்துள்ளன.
சாக்லேட்டுடன், தேங்காய் பால் மற்றும் வெல்லம் சேர்த்து மற்றொரு இனிப்பு தயாரிக்கிறோம். இது கடலோர பகுதிகளின், சம்பிரதாய தின்பண்டமாகும். எங்கள் யோசனையால் அக்கம், பக்கத்து நிலங்களில் கோகோ விதைகள் பயிரிடுகின்றனர். இவர்களிடம் கோகோ வாங்கி, சாக்லேட் தயாரிக்கிறோம்.
புத்துாரின், பெட்டம்பாடியில் சாக்லேட் தொழிற் சாலை அமைத்துள்ளோம். உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளோம். இந்த தொழிலை மேலும் வளர்க்க வேண்டும் என்பது, எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.