தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ மங்களூரில் மரங்களை நடும் மாதவ் உல்லால்!

 மங்களூரில் மரங்களை நடும் மாதவ் உல்லால்!

 மங்களூரில் மரங்களை நடும் மாதவ் உல்லால்!


ADDED : ஜூன் 06, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

ஒரு மரத்தை நடுவது எளிது. ஆனால் அதை பராமரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. மங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், 39 ஆண்டுகளாக மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரின் உல்லாலை சேர்ந்தவர் மாதவ் உல்லால், 58. மங்களூரு ஸ்ரீராமகிருஷ்ணா கூட்டுறவு சொசைட்டியில், வாடிக்கையாளர்களிடம் பணம் சேகரித்து, பராமரிப்பவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த, 39 ஆண்டுகளுக்கு முன், சில மரக்கன்றுகளை நடுவதில் தொடங்கிய அவரின் சுற்றுச்சூழல் பயணம், இன்று ஏழு மாவட்டங்களில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார்.

இவர் நட்ட மரங்கள் மூலம், நிழலும், பழங்களும், பல்லுயிர் பெருக்கத்தையும் வழங்கி உள்ளது. ஐந்து லட்சம் மரங்களின் ஊட்டச்சத்துக்கான பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

ஒரு வார்த்தை இது குறித்து அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன் மங்களூரின் ஹம்பன்கட்டே பகுதியில் கடுமையான வெயில் காணப்பட்டது. 'பூமியில் வெப்பத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்' என்று பெரியவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மரங்களை நட வேண்டும்' என்றனர்.

இந்த வார்த்தை என் வாழ்க்கையை மாற்றியது. ஒரு மரக்கன்று நட துவங்கிய என் ஆர்வம், இன்று மங்களூரில் லட்சக்கணக்கான மரங்கள் வளர்ந்து பலருக்கும் நிழல் தருகிறது.

குறிப்பாக, ஹம்பன்கட்டேயில், பல மரங்கள் பழங்கள் தர துவங்கி உள்ளன. இதன் மூலம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் பயனடை கின்றனர்.

பழங்களின் நகரம் மங்களூருவை அனைவரும், பழங்களின் நகரம் என்று அழைக்க வேண்டும் என்பதே எனது கனவு. 2027க்குள் நகரின் பல பகுதிகளில் இரண்டு லட்சம் பழ மரங்களை நட வேண்டும். இது குறித்து மங்களூரு மாநகராட்சியிடம் ஆலோசித்து வருகிறேன்.

இந்த மரங்களை சாலை ஓரங்கள், பள்ளி, கல்லுாரிகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பொது இடங்கள், காலி இடங்களில் நடுவதன் மூலம், வருங்கால சந்ததியினருக்கு பசுமையை விட்டு செல்லலாம்.

மங்களூரு - தாலபாடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்கள், இன்று பசுமையாக காட்சி அளிக்கின்றன. இந்த மரங்கள் வளர வனத்துறையினர், உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பே காரணம்.

என்னை பொறுத்த வரை, மரங்களை நடுவது திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. அவைகள் உயிரு டன் வாழ வைப்பதே உண்மையான சாதனை. எனவே தான், மரங்கள் நட்ட பின், குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அவற்றை பராமரித்து வருகிறேன்.

மருத்துவ மரங்கள் அலங்காரம், நிழல் தர மட்டும் மரங்களை நடவில்லை. இவற்றில், பூக்கள், மருத்துவ குணம் கொண்ட தாவரங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். மரத்தில் காய்க்கும் பழங்கள், மனிதர்களுக்கு மட்டுமின்றி, பறவைகள், விலங்குகள், பிற உயிரினங்களுக்கும் உணவாகும்.

இன்று நாம் நடும் கன்று, நாளை அழகாக வளர வேண்டுமானாலும், அதற்கு நம் அன்பு தேவை. காய்கனிகள், பூக்கள், மருத்துவ குணம் கொண்ட மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும். மரங்களுக்கு தீங்கு விளைவிக்காமல், அவற்றை பாதுகாக்க வேண்டும். இன்றயை பூமிக்கு மரங்களே மிக முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us