சிக் கிமில் 17,000 அடி உய ரத்தில் மலையேற்றம் அனுபவம் பற்றி என்.சி.சி., மாணவி பரவசம்
சிக் கிமில் 17,000 அடி உய ரத்தில் மலையேற்றம் அனுபவம் பற்றி என்.சி.சி., மாணவி பரவசம்
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 08:38 PM

- நமது நிருபர் -: தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரின் வாமான்ஜுரை சேர்ந்தவர் வில் பிரெட் - லிட்வின் கிரஸ்டா மகள் சோனல் ஜெசிகா கிரஸ்டா.
கர்நாடகா மற்றும் கோவா இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் கர்நாடக விமானப்படை பிரிவு என்.சி.சி.,யை சேர்ந்த சோனல் ஜெசிகா உட்பட ஆறு பேர், அக்., 23 முதல், நவ., 20ம் தேதி வரை சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் இமயமலை சாகச மற்றும் சூழல் சுற்றுலா மையத்தில் அடிப்படை மலையேற்ற பயிற்சியில் பங்கேற்றனர்.
தன் பயிற்சி அனுபவம் குறித்து சோனல் ஜெசிகா கிரஸ்டா கூறியதாவது:
சவாலான இந்த பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மலையேற்றத்தின் அடிப்படையை கற்றுக் கொள்ளவும், உடலையும், மனதையும் உறுதியாக வைத்து கொள்ள சோதிக்கப்பட்டது.
சகிப்புத்தன்மை, வலிமை, ஒழுக்கத்தை வளர்க்கும் வகையில் பயிற்சி நாட்கள் தினமும் கடுமையான காலை நேர உடற் பயிற்சியுடன் துவங்கும். இதை தொடர்ந்து விளையாட்டு, பாறை ஏறுதல், செங்குத்தான பாறை ஏறுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
மதியம் மலையேற்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள், மலையேற்ற விவரங்களை விவரிப்பர். மலையேறுவதற்கு முக்கியமான நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒன்பது நாள் பயிற்சிக்கு பின், 15 நாட்கள் தீவிர மலையேற்ற பயிற்சிக்காக, வடக்கு சிக்கிம் மலைப்பகுதிக்கு சென்றோம். அங்கு கூடாரங்களில் தங்கினோம். குளிரும், சவாலும் நிறைந்த மலை சூழலுக்கேற்றவாறு எங்களை மாற்றி கொண்டது புதிய அனுபவத்தை அளித்தது.
சகிப்பு தன்மை
அடிப்படை முகாமை 14,500 அடி உயரத்தில் அமைத்து, 15,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் மூலம், எங்களுக்கு சகிப்பு தன்மை, குழு பணி, மன உறுதியை கற்றுக்கொடுத்தது.
இந்த பயிற்சியில், 17,000 அடி உயரத்தை அடைவதற்காக அளிக்கப்பட்ட பயிற்சி எங்களுக்கு சவாலாக அமைந்தது. கடினமான நிலப்பரப் பு, கடும் குளிர், உடல் சோர்வையும் மீறி நான் உட்பட, 30 பேரும், மலையின் உச்சியை அடைந்து பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது மறக்க முடியாத அனுபவமாகும்.
மலையேற்ற பயிற்சிக்கு பின், எங்களுக்கு கோட்பாடு தேர்வு, மாரத்தான், நிர்வாகியுடனான நேர்காணலுக்கு பின் பயிற்சி மையத்துக்கு திரும்பினோம். இந்த செயல்பாடுகள் எங்களின் உடல் திறன், அறிவு, தன்னம்பிக்கை, மலையேற்றம் குறித்த புரிதலை சோதித்தன.
பொறுமை, தைரியம், ஒழுக்கம், குழு பணி, விடா முயற்சி ஆகியவற்றை கற்றுக்கொடுத்தது. இதுமட்டுமின்றி எங்களின் பலத்தை கண்டறியவும், தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், வாழ்நாள் முழுதும் நினைவில் நிற்கும் அனுபவத்தையும் வழங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.
