/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை வழங்கும் பேஸ் பேக்!
/
சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை வழங்கும் பேஸ் பேக்!
சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை வழங்கும் பேஸ் பேக்!
சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை வழங்கும் பேஸ் பேக்!
UPDATED : செப் 16, 2023 09:10 PM
ADDED : செப் 16, 2023 09:07 PM

அழகு நிலையங்களுக்கு செல்லாமல் உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதில் ஃபேஸ் பேக் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 முதல் 20 நிமிடங்களுக்கு முகத்தில் இதனை போடுவதால் சருமத்தை புத்துணர்வாக்கும். அதனை எப்படி போட வேண்டும் என பார்ப்போம்.
நீங்கள் எண்ணெய் சருமத்தை சமாளிக்க விரும்பினால், அழகு சாதனத்திற்கான ஸ்டார்ட்டர் பேக்கில் ஃபேஸ் பேக் இருக்க வேண்டும். அதனை அப்ளை செய்வதற்கு முன் செய்ய வேண்டிய படிநிலைகள் குறித்து இங்கே...
சருமத்தை சுத்தப்படுத்துங்கள்
ஃபேஸ் பேக்கைப் போடுவதற்கு முன் தூசு, அழுக்கு இல்லாமல் முகம் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அழுக்கு சருமத்தில் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனால் முகப்பருக்கள் உண்டாகலாம்.
மென்மையான டவலைப் பயன்படுத்தவும்
முகத்தை சுத்தமாக்கியதும், சருமத்தை உலர வைக்க மென்மையான டவலைப் பயன்படுத்தவும். கடுமையாக தேய்த்து துடைக்கக் கூடாது. ஒத்தி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஃபேஸ் பேக்கை சீராக அப்ளை செய்யவும்
![]() |
15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்
ஃபேஸ் பேக் பார்முலேஷனை நீண்ட நேரம் முகத்திலேயே விட்டுவிட்டால், வறட்சி, இறுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே 15 முதல் 20 நிமிடங்களில் கலைத்துவிடுங்கள்.
மெதுவாக கழுவுங்கள்
15 நிமிடங்கள் கடந்ததும், பேக்கை வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, எந்த தடயமும் இல்லாமல் கழுவிக்கொள்ளுங்கள். இப்படியாக வாரத்திற்கு 2 முறை ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் முகம் பளிச்சிடும்.