தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/பிரிட்ஜில் வைக்க கூடாத 7 உணவு பொருட்கள்..!

பிரிட்ஜில் வைக்க கூடாத 7 உணவு பொருட்கள்..!

பிரிட்ஜில் வைக்க கூடாத 7 உணவு பொருட்கள்..!


UPDATED : ஆக 16, 2023 06:58 PM

ADDED : ஆக 16, 2023 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2023 06:58 PM ADDED : ஆக 16, 2023 06:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைக்கு அனைவரது வீடுகளிலும் தவறாமல் இருக்கும் சாதனமாக குளிர்சாதன பெட்டி எனப்படும் பிரிட்ஜ் மாறிவிட்டது. சந்தையிலோ, கடையிலோ வாங்கி வரும் பழங்கள், காய்கறிகள் கெட்டு போகாமல் இருக்க பிரிட்ஜில் வைப்பது வழக்கமாக மாறி விட்டது. சமைத்த உணவை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி உண்பது நம் ஆரோக்கியத்திற்கு நாமே வேட்டு வைப்பதற்கு சமம். பிரிட்ஜில் வைக்கவே கூடாத 7 உணவு பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

1. தக்காளி :

தக்காளியை பிரிட்ஜில் வைக்கும் போது, சில நேரங்களில் அதிக குளிர் காரணமாக, அதன் செல் சுவர்கள் உடைவதால்,அதன் உண்மையான சுவையை இழக்க நேரிடும். மேலும் தக்காளியை லேசானதாக மாற்றும்.

2. தேன் :

தேனில் இயற்கையாகவே கெட்டுபோகாத தன்மை இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. எனவே தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. பிரிட்ஜில் வைத்தால் தேன் உறைந்து போகவும், பயன்படாத முடியாத அளவுக்கு மாறலாம்.

Image 1155923
3. காபி தூள் :

காபி தூள் அல்லது காபி கொட்டையை பிரிட்ஜில் வைக்கும் போது, அனைத்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, பிற காய்கறி வாசனைகளை இழுத்து கொள்ளும். இது காபியை விரும்பத்தகாத சுவையுள்ளதாக மாற்றக்கூடும்.

4. வாழைப்பழம் :

குளிர்ந்த சூழல், வாழைப்பழங்களை வைப்பதற்கு ஏற்றது அல்ல. குறைந்த வெப்பநிலையில் இருக்கும் போது, வாழைப்பழங்கள், இயற்கையான பழுக்க வைக்கும் நொதிகளில் குறுக்கிடுகிவதால் கறுப்பாக மாறக்கூடும். எனவே வாழைப்பழங்கள், விரைவில் அழுகி போவதற்கு வாய்ப்புள்ளது.

5. வெங்காயம் :

வெங்காயம் பொதுவாக தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. பிரிட்ஜில் வைக்கும் போது, வெங்காயம் லேசாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் எளிதில் பாக்டீரியா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.

Image 1155924
6. பூண்டு :



ஈரப்பதமில்லாத, சாதாரண அறை வெப்பநிலையில் பூண்டை வைத்திருந்தால் நீண்டகாலம் புதியது போன்றே இருக்கும். பிரிட்ஜில் பூண்டை வைக்கும் போது, விரைவில் சுருங்கி போவதற்கும், முன்கூட்டியே முளைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

7. உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதால், குளிர்ந்த, சூரிய ஒளிபடாத, உலர்ந்த சூழல் அவசியம். பிரிட்ஜில் உருளைக்கிழங்கை வைப்பதால், அதில் உள்ள ஸ்டார்ச் , சர்க்கரையாக மாறுமென்பதால், இனிப்பு கிழங்காக மாறலாம். விரைவாக கெட்டு போக கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us