ADDED : அக் 25, 2024 09:11 PM

செய்முறை
முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், முருங்கை இலையை மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவை போட்டு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சோம்பு, உப்பு போட்டு பூரி பதத்துக்கு பிசையுங்கள். இதை 10 நிமிடம் வரை, மூடி வையுங்கள்.
அதன்பின் இந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, தட்டையாக தட்டுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றுங்கள். சூடானதும் தட்டி வைத்துள்ள தட்டைகளை எண்ணெயில் போட்டு பொறித்தெடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.
முருங்கைக்காய் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. குறிப்பாக முருங்கை இலையில், புரத சத்துகள் ஏராளம். இலையை பொரியலுக்கு பயன்படுத்துவர். ஆனால் முருங்கை இலையில் பூரி செய்யலாம் என்பது, உங்களுக்கு தெரியுமா?
தேவையான
பொருட்கள்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
முருங்கை இலை - அரை கைப்பிடி
கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
சோம்பு -- 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு