தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/மலாய் சிக்கன் கிரேவி

மலாய் சிக்கன் கிரேவி

மலாய் சிக்கன் கிரேவி


UPDATED : ஆக 31, 2026 08:06 AM

ADDED : ஆக 29, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 08:06 AM ADDED : ஆக 29, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசைவ உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சிக்கன் தான். எப்போதும் ஒரே மாதிரியாக சிக்கன் சாப்பிடுவதை விட வித்தியாசமான முறையில் சாப்பிடுவது மிக முக்கியம். அந்த வகையில் இப்பதிவில் ஸ்பெஷல் சிக்கன் மலாய் கிரேவி ரெசிபி சுலபமாக எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

1 கப் வறுத்த வெங்காயம் (பிரிஸ்தா)

கரம் மசாலா தூள் - 2 ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

ப்ரெஷ் க்ரீம்தயிர் - 1 கப்

நெய் - 5 ஸ்பூன்

தேவையான அளவு உப்பு

முந்திரி - 50 கிராம்

பாதாம் - 10

முலாம்பழம் விதைகள் - சிறிது

கசகசா - 2 ஸ்பூன்

தேங்காய் - 2

காய்ந்த மிளகாய் - 10

பூண்டு விழுது - 2 ஸ்பூன்

பட்டை - 2 துண்டு

பச்சை ஏலக்காய் - 5

வெள்ளை மிளகுத் தூள் - சிறிது

1 கிலோ கோழி இறைச்சி (சிக்கன்)

செய்முறை:

முலாம்பழம் விதைகள், கசகசா, தேங்காய், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் உலர்ந்த மிளகாய், பிரிஞ்சி இலைகள், இலவங்கப்பட்டை, ஏலக்காய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து -10 நிமிடங்கள் வேகவைக்கவும். சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வேக வைக்க வேண்டும். அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, வெங்காய ப்யூரி சேர்த்து, 3-5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.அதில் இரண்டரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகு தூள் மற்றும் வேக வைத்த சிக்கன் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

பின்பு இதில் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு ப்ரஷ் கிரீம்,தயிர் சேர்த்து கிரேவி நன்கு கெட்டியாகும் வரை 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

இப்போது ருசியான மலாய் சிக்கன் கிரேவி தயார். இதனை நெய் சாதம் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us