/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
வீட்டிலேயே செய்யலாம் மங்களூரு பன்
/
வீட்டிலேயே செய்யலாம் மங்களூரு பன்
ADDED : மே 16, 2025 09:57 PM

மங்களூரு பகுதிகளில், மங்களூரு பன் மிகவும் பிரபலமான சிற்றுண்டி. காலை சிற்றுண்டிக்கும் இதையே சாப்பிடுவர். மாலை டீயுடன் இதை சாப்பிடுவர். மங்களூரு பன் மற்ற நகரங்களிலும் கிடைக்கிறது. இதை சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
செய்முறை
வாழைப்பழங்களை தோல் உறித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, கரண்டி அல்லது கையால் நன்கு பிசையவும். இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அதன்பின் சீரகம், உப்பு, தயிர், பேக்கிங் சோடா ஆகியவை சேர்த்து நன்றாக கலக்கவும். இக்கலவையில் மைதா மாவு போட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஐந்து நிமிடம் நன்றாக பிசைய வேண்டும். அதன்பின் மாவு மீது எண்ணெய் தடவவும். ஒரு மெல்லிய துணியை நீரில் நனைத்து, பிழிந்து கொள்ளவும். அந்த துணியால் மாவை மூடி எட்டு மணி நேரம் வைத்திருங்கள்.
அதன்பின் மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி பூரியை விட சிறியதாக தட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் மாவை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சுவையான மங்களூரு பன் தயார். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
- நமது நிருபர் -