உடலுக்கு ஆரோக்கியம் தரும்.. சத்தான, சுவையான.. எள் உருண்டை...!
உடலுக்கு ஆரோக்கியம் தரும்.. சத்தான, சுவையான.. எள் உருண்டை...!
UPDATED : ஜூன் 23, 2022 01:56 PM
ADDED : ஜூன் 23, 2022 01:51 PM

'இளைத்தவனுக்கு எள்ளு; கொளுத்தவனுக்கு கொள்ளு'னு பெரியவங்க சொல்வாங்க. எள்ளு சாப்பிட அவ்ளோ சத்து கிடைக்கும்.
உடல் பலவீனமானவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். உணவில் அடிக்கடி எள்ளை சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படுகிறது.
எள்ளில் உள்ள இரும்பு, ஜிங்க், துத்தநாக சத்துகள் உடம்புக்கு தேவையான பலத்தை தருகிறது.
மூட்டுத் தேய்மானம், எலும்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பலன் அளிக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.
![]() |
தேவையானப் பொருட்கள்
எள் - 1/2 கிலோ
வேர்க்கடலை - 1/4 கிலோ
ராகி மாவு - 100 கிராம்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கிலோ
எப்படிச் செய்வது?
எள்ளை நன்றாக கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். பின் அடுப்பில் ஒரு வாணலில் நன்றாக வாசனை வரும் வரை வறுத்து, தட்டில் பரவலாக கொட்டி ஆற வைக்கவும். தோல் நீக்கிய வேர்க்கடலையை வாணலியில் வறுத்தெடுத்து ஆற வைக்கவும். ராகி மாவை தண்ணீருடன் கலக்கி, சிறு சிறு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
![]() |


