sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

வயிற்று உப்புசத்தை குறைக்கும் 5 உணவுகள்..!

/

வயிற்று உப்புசத்தை குறைக்கும் 5 உணவுகள்..!

வயிற்று உப்புசத்தை குறைக்கும் 5 உணவுகள்..!

வயிற்று உப்புசத்தை குறைக்கும் 5 உணவுகள்..!


UPDATED : ஆக 16, 2023 02:40 PM

ADDED : ஆக 16, 2023 02:30 PM

Google News

UPDATED : ஆக 16, 2023 02:40 PM ADDED : ஆக 16, 2023 02:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், பசியின்றி சாப்பிடுவதும், நேரம் தவறி சாப்பிடுவதும் வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான மது

அருந்துதல், வயிற்றில் ஏற்படும் தொற்று காரணமாக கூட வயிறு வீங்கி, உப்புசம்

ஏற்படும். வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான வாயு உருவாக்கத்தை கீழ்க்கண்ட

உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் குறைக்கலாம்.

1.வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காயில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காய் எடுத்து கொள்வதால், வயிறு உப்புசத்தை குறைப்பதோடு, நீர்ச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் அஜீரணத்தை குறைக்கிறது.

Image 1155890
2. தயிர் :

தயிரில் புரோபயோட்டிக்ஸ் நிறைந்துள்ளது. புரோபயாடிக்குகள் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையே ஆரோக்கியமான சமநிலையை

பராமரிக்க உதவுகிறது. இது பெருங்குடலில் மலத்தின் நிலைத்தன்மையை இளக செய்வதால், தேவையற்ற வாயுக்கள் வயிற்றில் தங்குவதை தடுப்பதுடன், ஒழுங்குப்படுத்துகிறது.

3. கிரீன் டீ :

கிரீன் டீயில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. கிரீன் டீ அருந்துவது, வயிற்று வீக்கத்தை குறைப்பதோடு, இதில் உள்ள காஃபின் சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதால் வயிறு எளிதாக உணர வைக்கிறது.

Image 1155891
4. இஞ்சி :

செரிமான கோளாறுகளை சரி செய்வதில் இஞ்சி சிறந்த நிவாரணியாக உள்ளது. இஞ்சி வயிறு காலியாக இருப்பதை துரிதப்படுத்துகிறது. இதனால் வயிறு மிதப்பது அல்லது எப்போதும் நிரம்பியது போன்ற உணர்வதை குறைக்கிறது.

5. ஓட்ஸ் :

ஓட்ஸில் பீட்டா குளுக்கான் நிறைந்துள்ளது. இது வயிற்று அழற்சிக்கு எதிரான நன்றாக செயல்படும் ஆற்றல் கொண்டது. வயிற்றில் ஏற்படும் வீக்கத்தை

குறைக்க உதவும்.

Image 1155892


இந்த உணவுகளை எடுத்து கொண்டாலும், வயிறு உப்புசம் அல்லது வயிறு வீக்கம்

தொடரும்பட்சத்தில் அருகில் உள்ள மருத்துவரை அணுகி, சரியான வழிகாட்டுதலை

பின்பற்றுவது பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.






      Dinamalar
      Follow us