/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்..!
/
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்..!
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்..!
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்..!
UPDATED : ஜூன் 26, 2023 03:13 PM
ADDED : ஜூன் 26, 2023 03:11 PM

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27ம் தேதி சர்வதேச அன்னாசி பழ தினமாக கொண்டாடப்படுகிறது. பழங்களிலேயே ஊட்டச்சத்து நிறைந்த பழமாக அறியப்படும் அன்னாசி பழத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்லும் வகையில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னாசி பழத்தின் தாயகம் தென் அமெரிக்க நாடான பிரேசில் ஆகும். 11ம் நூற்றாண்டில் அன்னாசி பழம் இந்தியாவில் நுழைந்தது.
கரீபியர்கள் தங்களின் விருந்தோம்பல் அடையாளமாக அன்னாசி பழத்தை தங்கள் குடிசை வீடுகளில் கட்டி தொங்க விடுவது வழக்கம். உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட அன்னாசி பழ ரகங்கள் உள்ளது. இருப்பினும், குயின், ரெட் ஸ்பானிஷ், அபாகாக்ஸி, ஸ்மூத் கெய்ன் என 4 வகைகளாக பிரிக்கின்றனர். எளிதில் செரிமானத்தை தூண்டும் கருவியாக அன்னாசி பழம் பயன்படுத்தப்படுகிறது.
![]() |
அன்னாசி பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் :
1.அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்துடன், அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது.
2.புரோமெலைனில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலில் காயத்தால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
3.அன்னாசி பழத்தில் வைட்டமின், தாது பொருட்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4.புரோமெலைனில் வலிக்கு எதிராக செயல்படும் ஆற்றல் இருப்பதால், மூட்டுவலியால் பாதிக்கப்பட்டோர் பைனாப்பிளை அடிக்கடி எடுத்து கொள்ளலாம்.
![]() |
5.அன்னாசி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பினோலிக்ஸ், ஃபிளாவனாய்டு மற்றும் வைட்டமின்- சி சத்துக்கள் அதிகமிருப்பதால், புற்றுநோய் ஏற்படுவதற்கான
அபாயத்தை குறைக்க உதவுகிறது.
6.உடல் எடையை குறைக்க, தொப்பையை கரைக்க முயற்சி செய்வோர் அன்னாசி பழத்தை எடுத்து கொண்டால் மாற்றத்தை காணலாம்.
7.எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியத்துடன், மாங்கனீசு அவசியம். இவை இரண்டும் அன்னாசி பழத்தில் நிறைந்துள்ளது.