/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கவனத்தை அதிகரிக்கும் வில் வித்தை..!
/
கவனத்தை அதிகரிக்கும் வில் வித்தை..!
UPDATED : ஜன 10, 2023 10:10 AM
ADDED : ஜன 10, 2023 10:06 AM

சமீப காலங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பள்ளிக் கல்விவுடன் அவர்களது பிற திறமைகள் வெளிக்கொணற அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். நீச்சல், வில்வித்தை, இசை, நடனம், ஓவியம், தற்காப்புக் கலைகள், விளையாட்டு உள்ளிட்ட பல கலைகளுக்கு தனியார் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தற்போது ஏட்டுக் கல்விக்கு இணையாக இந்த வகுப்புகளும் பிரபலமடைந்து வருகின்றன.
![]() |
90களில் கோடை விடுமுறை காலமான ஏப்., மே மாதங்களில் மட்டுமே பிள்ளைகள் இதுபோன்ற வகுப்புகளில் சேர்க்கப்படுவர். பிள்ளைகளின் ஆர்வமான துறை எது எனத் தெரியாமல் ஒரு குழந்தையை இரண்டு, மூன்று வகுப்புகளில் சேர்த்துவிடுவர். இதனால் அவர்கள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியாமல் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அரசு மற்றும் தனியார் பணிகளுக்குச் சென்றுவிடுவர்.
![]() |
குழந்தைகளின் திறமைகளை மிக இளவயதிலேயே கண்டறிந்து ஒரே கலையை தொடர்ந்து கற்கச் செய்தால் அவர்களால் அந்தக் கலையில் பின்னாட்களில் உச்சம் தொட முடியும் என்பதை தற்போதைய பெற்றோர் தங்களது கடந்தகால வாழ்வனுபவம் மூலமாக உணர்ந்துள்ளனர். இதனால் மூன்று வயது நிரம்பிய எல்கேஜி பயிலும் குழந்தைகள் மேற்கண்ட வகுப்புகளுள் ஏதாவதொன்றில் சேர்க்கப்படுகின்றனர். பல ஆண்டுகள் ஒரு துறையில் பயிற்சி பெறுவதால் இவர்களால் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில் வில்வித்தை குழந்தைகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்க சிறு வயதில் இருந்து அவர்கள் தயார்ப் படுத்தப்படுகின்றனர். வில் வித்தை குழந்தைகளின் உடல்நலம் மட்டுமின்றி மன நலம் மேம்படவும் சிறந்த பங்காற்றுகிறது. வில் வித்தை கற்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஆரோக்கியப் பலன்கள் என்னென்ன எனப் பார்ப்போமா?
வில் வித்தையில் இலக்கை குறி பார்த்து அம்பு செலுத்த அதீத மனக் கட்டுப்பாடு, கவனம் தேவை. இதனை சிறுவயதில் கற்பதால் குழந்தைகளின் மனம் ஒருமுகப் படுத்தப்படுகிறது. கவனம் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் பள்ளியில் பயிலும் பாடங்களை எளிதில் மனதில் பதியவைத்துக் கொள்ளமுடியும்.
வேகமாகத் தேர்வு எழுதுவதற்கு கண்-கைகள் இடையேயான ஒத்துழைப்பு அவசியம். வில்-அம்பு கொண்டு தினமும் பயிற்சி செய்யும்போது இது அதிகரிக்கிறது.
![]() |
குழந்தைகளின் மார்பு, தோள், முழங்கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் தசை வலு அதிகரிக்கிறது.
சொல்லவேண்டிய அவசியம் இன்றி வில்வித்தை பிற விளையாட்டுகள் போல குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது குழந்தைகளிடையே சமூக உறவை வளர்த்தெடுக்க உதவுகிறது. இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தில் தனியாக எதிர்கொள்ள இயலும்.