தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கார்டியாக் அரெஸ்ட் vs மாரடைப்பு; அறிகுறிகள் மற்றும் முக்கிய வித்தியாசங்கள்

கார்டியாக் அரெஸ்ட் vs மாரடைப்பு; அறிகுறிகள் மற்றும் முக்கிய வித்தியாசங்கள்

கார்டியாக் அரெஸ்ட் vs மாரடைப்பு; அறிகுறிகள் மற்றும் முக்கிய வித்தியாசங்கள்


UPDATED : அக் 12, 2026 07:29 AM

ADDED : அக் 10, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:29 AM ADDED : அக் 10, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன? இது ஹார்ட் அட்டாக்கில் இருந்து எப்படி வேறுபடுகிறது? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இரண்டும் இதயத்துடன் தொடர்புடைய அவசர நிலைகள் என்றாலும், கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஒன்றல்ல. அவையே எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை தெரிந்துகொள்வது அவசர நேரத்தில் மிகவும் முக்கியம்.

கார்டியாக் அரெஸ்ட்:

கார்டியாக் அரெஸ்ட் (Cardiac Arrest) என்பது இதயம் திடீரென ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்தும் நிலை. இதனால் மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம், ஆக்சிஜன் செல்வது திடீரென குறைகிறது. பொதுவாக இதயத்தின் மின் இயக்கத்தில் ஏற்படும் கடுமையான பிரச்சினை காரணமாக இதயம் சரியாகத் துடிக்காமல் போகிறது.

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால், ஒருவர் திடீரென மயங்கி விழலாம், சுயநினைவை இழக்கலாம் மற்றும் இயல்பாக சுவாசிக்காமல் இருக்கலாம். இந்த நிலை ஏற்பட்டால் உடனடியாக CPR மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

மாரடைப்பு என்பது இதய தசைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும் நிலை. அடைப்பு காரணமாக இதயத்தின் ஒரு பகுதிக்கு போதுமான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள இதய தசை பாதிக்கத் தொடங்குகிறது. ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ள நபர் பொதுவாக சுயநினைவுடன் இருக்கலாம். ஆனால் மார்பு வலி அல்லது அழுத்தம், மூச்சுத்திணறல், அதிக வியர்வை, குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

ஹார்ட் அட்டாக் கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படுத்துமா?

இவை ஒன்றல்ல என்றாலும், இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. கடுமையான ஹார்ட் அட்டாக் சில நேரங்களில் இதயத்தின் மின் இயக்கத்தை பாதித்து சீரற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு ஹார்ட் அட்டாக் மட்டுமே காரணம் அல்ல. பல்வேறு இதய நோய்கள் மற்றும் இதயத்தின் மின் இயக்கக் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம்.

ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள் என்ன?

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது ஏற்படக்கூடிய அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* மார்பில் வலி அல்லது அசவுகரியம் வலி கை, தோள், முதுகு, கழுத்து அல்லது தாடைக்கு பரவுதல்

* மூச்சுத்திணறல்

* வழக்கத்திற்கு மாறான சோர்வு

* சீரற்ற இதயத்துடிப்பு

* குமட்டல் அல்லது வாந்தி

* தலைச்சுற்றல்

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் உடலில் வெளிப்படும் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* திடீரென மயங்கி விழுதல்

* சுயநினைவை இழத்தல்

* அழைத்தாலும் பதிலளிக்காமல் இருப்பது

* இயல்பாக சுவாசிக்காமல் இருப்பது

* நாடித்துடிப்பு இல்லாமல் இருப்பது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us