/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கர்ப்ப காலத்தில் கால் வலியா? தவிர்க்க இதோ டிரிக்ஸ் !
/
கர்ப்ப காலத்தில் கால் வலியா? தவிர்க்க இதோ டிரிக்ஸ் !
கர்ப்ப காலத்தில் கால் வலியா? தவிர்க்க இதோ டிரிக்ஸ் !
கர்ப்ப காலத்தில் கால் வலியா? தவிர்க்க இதோ டிரிக்ஸ் !
UPDATED : செப் 16, 2023 01:55 PM
ADDED : செப் 16, 2023 01:53 PM

கர்ப்ப காலம் என்பது உற்சாகமும், எதிர்பார்ப்பும் நிறைந்த ஒரு அழகிய பயணம். புதிய வரவை எதிர்நோக்கி பலவித எதிர்பார்ப்புகள் இருப்பினும், சில எதிர்பாராத பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. மார்னிங் சிக்னஸ், ஹார்மோன் மாற்றங்கள், நெஞ்செரிச்சல், முதுகுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதில், பொதுவான ஒன்று கால் பிடிப்பு அல்லது கால் வலி.
துவக்க நிலை கர்ப்ப காலத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது (ட்ரைமெஸ்டர்) மூன்று மாதங்களில் இந்த கால் வலி உண்டாகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த கால் வலி அடிக்கடி உணரப்படுவதால், தூக்கமும் பாதிக்கப்படுகிறது.
![]() |
உடலின் எடையை கால் பகுதிதான் தாங்கிக் கொள்கிறது. கர்ப்ப காலத்தில் உடல் எடை மட்டுமின்றி ரத்த அளவு அதிகரிக்கிறது. அப்போது, ரத்த நாளங்களில் அதிக அழுத்தமும், ஏற்படுவதால் கால் பிடிப்புக்கு வழிவகுக்கிறது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு, சோர்வு போன்ற காரணங்களால் கால் வலி உண்டாகிறது.
எனவே, கால் பிடிப்பை குறைக்க அடிக்கடி தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தினமும் 1000 மி.கி., கால்சியம் சத்து தேவைப்படுகிறது. எனவே, போதியளவு கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். உலர் விதைகள் மற்றும் பழங்கள், வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை எடுக்கலாம்.
![]() |
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியமானது. கால்களை மேலும், கீழும் அழுத்தித் தருதல் போன்ற எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். வலியை தவிர்க்க பாதங்களில் மென்மையாக மசாஜ் செய்யலாம். கூல் அல்லது ஹாட் பேக் ஒத்தடம் தரலாம். கால் வலி குறையாமல் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ கட்டாயமாக டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும்.