sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 03, 2026 ,சித்திரை 20, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

இருக்கவே இருக்கு உளுந்தங்கஞ்சி.. இடுப்பு, மூட்டு வலிக்கு பை சொல்லுங்க!

/

இருக்கவே இருக்கு உளுந்தங்கஞ்சி.. இடுப்பு, மூட்டு வலிக்கு பை சொல்லுங்க!

இருக்கவே இருக்கு உளுந்தங்கஞ்சி.. இடுப்பு, மூட்டு வலிக்கு பை சொல்லுங்க!

இருக்கவே இருக்கு உளுந்தங்கஞ்சி.. இடுப்பு, மூட்டு வலிக்கு பை சொல்லுங்க!


UPDATED : ஜூன் 07, 2022 02:22 PM

ADDED : ஜூன் 07, 2022 02:13 PM

Google News

UPDATED : ஜூன் 07, 2022 02:22 PM ADDED : ஜூன் 07, 2022 02:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய பரபரப்பான சூழலில் டிபன், லஞ்ச், டின்னர் என அனைத்தையும் சில நிமிடங்களில் சமைத்துவிட்டு வேலைக்கு செல்வது வாடிக்கையாகி விட்டது. பின்னர் ஆரோக்கிய குறைவால் டாக்டரை தேடியும் அலைய வேண்டியுள்ளது. இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற மருந்து, மாத்திரை, பழங்கள், காய்கறிகள் என வாங்கும் செலவு வேறு தனிக்கணக்கு.

Image 957637


எனவே துவக்கத்திலேயே சத்தான உணவுகளை சாப்பிட்டால் வீண் அலைச்சலை தவிர்க்கலாம். அதேவேளையில் சமையலும் விரைவில் முடிய வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் உளுந்தங்கஞ்சியை தேர்வு செய்யலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது. வேலையும் 'டக்'குன்னு ஐந்தே நிமிடங்களில் முடிந்து விடும்.

சத்தான உளுந்தங்கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:


பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - 1/2 டம்ளர்

கருப்பு உளுந்து - 1 டம்ளர்

வெள்ளை பூண்டு - 30 பல்

சீரகம் - 1 டீஸ்பூன்

குருமிளகு - 1/2 டீஸ்பூன்

கல் உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 8 டம்ளர்

செய்வது எப்படி?


மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் குக்கரில் எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் 8 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியை திறந்து, பருப்பு மத்து அல்லது கரண்டியால் கஞ்சியை மசித்து விடவும். அப்போதுதான் வெள்ளைபூண்டும் நன்றாக மசியும்; குழந்தைகள் அடையாளம் காண முடியாமல் உண்பர். இல்லாவிட்டால் வெள்ளைப்பூண்டை தவிர்த்து விட வாய்ப்புள்ளது. கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் கொதிக்க வைத்த தண்ணீரை சிறிதளவு கலக்கலாம். கருப்பு உளுந்து தோலுடன் வெந்த பின், பார்ப்பதற்கு பாசிப்பய்றை போன்று மிருதுவாகவும், சுவையுடனும் கஞ்சி இருக்கும்.

Image 957638

கருப்பு உளுந்தின் பயன்கள்:


* உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.

* ரத்தசோகை வராமல் தடுக்கிறது.

* மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம்.

* ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

* இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டு வலி, கை, கால் சோர்வில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக இருக்கலாம்.

Image 957639

பெண்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்


கருப்பு உளுந்தில் உள்ள சத்துகள் பெண்களின் உடலுக்கு வலு கொடுக்க செய்கிறது. வாரம் ஒரு முறை குடித்து வந்தாலே போதுமானது. பிரசவத்துக்கு பின் வரும் இடுப்பு வலி, மூட்டு வலி, எலும்பு முறிவு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். கருப்பை கோளாறுகளையும் தடுக்க கூடியது இந்த கருப்பு உளுந்து.






      Dinamalar
      Follow us