sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

குதிகால் வலியிலிருந்து விடுபடுங்கள்!

/

குதிகால் வலியிலிருந்து விடுபடுங்கள்!

குதிகால் வலியிலிருந்து விடுபடுங்கள்!

குதிகால் வலியிலிருந்து விடுபடுங்கள்!


UPDATED : அக் 13, 2022 10:48 AM

ADDED : அக் 13, 2022 10:44 AM

Google News

UPDATED : அக் 13, 2022 10:48 AM ADDED : அக் 13, 2022 10:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலையில் தூங்கி எழுந்ததும் படுக்கையை விட்டு கால்களை தரையில் வைக்க விடாமல் பலரையும் படுத்தியெடுப்பவது குதிகால் வலி. மூட்டு வலி ஒருவரை முடக்கி போடும் என்பது போல், குதிகால் வலியும் பரவலாக பலரையும் தாக்கத் துவங்கிவிட்டது. இது பொதுவாக முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகின்றது. அதுவும் பெண்களுகிடையேதானே இது அதிகம் காணப்பபடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வலி எதனால் வருகிறது?:


Image 1010132


குதிகால் எலும்பிலிருந்து 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' (Plantar Aponeurosis) எனும் திசுக்கள் கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் குதிகால் வலி வரும். சிலருக்குக் குதிகால் பகுதியில் சிறியளவிலான எலும்பு வளரக்கூடும் இதை 'கால்கேனியல்ஸ்பர்' (Calcaneal Spur) என அழைப்பர். இதனாலும் குதிகால் வலி வரலாம்.

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானாலும் வலி வரும். முடக்குவாதம், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம். மேலும் சுளுக்கு, எலும்பு முறிவு, எதிர்வினை மூட்டுவலி போல வேறு சில காரணங்களாலும் குதிகால் வலி வரும்.

யாருக்கு வரும்? :


• தினமும் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு, விளையாட்டு வீரர்கள், நின்று பணி செய்யும் போலீஸ், ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு வரும்.

• ஓட்டப் பயிற்சி, ஜிம் பயிற்சி எடுக்கும் போது 'வார்ம் அப்' (Warmup) செய்யாமல் செய்தால் குதிகால் வலி ஏற்படும்.

• தாய், தந்தைக்கு இந்த பிரச்னையிருந்தாலும் அவர்களது பிள்ளைகளுக்கு வரக்கூடும்.

• ஹை ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பு அணிபவர்களுக்குக் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பாதிப்புகள்:


தாங்க முடியாத வலி, குதிகால் சிவத்தல், வீக்கம் நிற்க முடியாத நிலை போன்றவை இதன் அறிகுறிகள். குதிகால் வலி வந்தால், நடைபயிற்சி, நின்று அல்லது நடந்து செய்யக்கூடிய எந்த செயலையும் செய்ய முடியாமல் வலியைத் தரும். மேலும் உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு, இது மேலும் சுமையாகும்.

வலியிலிருந்து மீள என்ன செய்யலாம்?:


Image 1010133


• எந்த வலிக்கும் முதல் தீர்வு ஓய்வு தான். ஓய்வு அவசியம் எடுக்கும்பட்சத்தில் வலி குறைய வாய்ப்புண்டு

• சரியான மருத்துவரின் ஆவோசணையின் பெயரில் எதிர் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

• காலின் குதிபாகத்தில் கூடுதல் பஞ்சு வைத்த காலணிகள் அணிவது நல்ல பலன் தரும். 'ஆங்கிள் சாக்ஸ்' (Pain relief AnkleSocks) பயன்படுத்தலாம்.

• வலி வழக்கமாக ஏற்படும் போது பாதத்தை முன்னும் பின்முமாக 'ஸ்ட்ரெச்சிங்' (leg streching) பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது 20 முறை செய்யலாம்.

• மிதமான சூட்டிலான வெந்நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் வரை கால்களை வைத்திருக்கலாம். வலி அதகமிருப்பின் தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.








      Dinamalar
      Follow us