தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/பாத எரிச்சல் : காரணமும், தீர்வுகளும்

பாத எரிச்சல் : காரணமும், தீர்வுகளும்

பாத எரிச்சல் : காரணமும், தீர்வுகளும்

1


UPDATED : அக் 19, 2022 05:01 PM

ADDED : அக் 19, 2022 02:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2022 05:01 PM ADDED : அக் 19, 2022 02:37 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கால்களுக்கு வரும் பல பிரச்னைகளில் ஒன்று பாத எரிச்சல். குறிப்பாக பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்பட்டால் வலியை தாண்டி பாத எரிச்சல் ஏற்படும். இதனால் பாதங்களில் ஓர் எரியும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

சில சமயம் கடுமையான வலியை போல எரிச்சலும் நாம் தாங்க முடியாத அளவிற்கு ஏற்படும். கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறி. பின் அந்த பகுதிகளில் உணர்ச்சி இல்லாமல் இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த எரிச்சல் உணர்வு ஏற்படும்.

யாருக்கு எல்லாம் வரும்?


பாதங்களில் உள்ள நரம்புகள் சேதம் ஏற்படுவதால் தான் பாத எரிச்சல் உண்டாகும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். அதனபாத எரிச்சல் என்றவுடன் சர்க்கரை நோய் இருக்கும் என எண்ண வேண்டாம். சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுக்கும் போதும், முடக்கு வாதம், தொற்று, ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி போன்ற பல காரணங்களாலும் நரம்பு சேதம் ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாக எரிச்சல் வரலாம்.

ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல் உண்டாகும். குறிப்பாக வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் ஏற்படலாம். அதிலும் பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை வரும். ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதால் பாத எரிச்சல் வரும். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் உண்டாகும். 'ஹைப்போ தைராய்டிசம்' இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.

சில தீர்வுகள்:


Image 1012972


• பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால் தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் காரணத்தைக் கண்டறிந்து தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது

• மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.

• மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும். 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

• கற்றாழையில் உள்ள சதை பகுதியை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் பாத எரிச்சல் குறையும்.• உறங்கும் முன் வெந்நீரில் சிறுது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். பின் சுத்தமான தேங்காய் எண்ணெயைகாலில் தடவினால் எரிச்சல் மறையும்.

• வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். ஆகவே முழு தானிய பொருட்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர், மற்றும் முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us