/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
தசை வலியைக் குறைக்கும் எளிய வீட்டு வைத்தியம்
/
தசை வலியைக் குறைக்கும் எளிய வீட்டு வைத்தியம்
UPDATED : டிச 02, 2022 02:08 PM
ADDED : டிச 02, 2022 01:50 PM

வாழ்நாளில் வலியை உணராத மனிதர்களே இருக்க முடியாது. வலிகளில் அதிகப்படியாக ஏற்படும் ஒன்று தசை வலி. முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட வலி, இப்போது இளம்வயதினருக்கும் ஏற்படுகிறது. அதிக உடல் உழைப்பு அல்லது உடல் உறுப்புகளின் செயல்பாட்டால் ஏற்படும் பிரச்னை தான் தசை வலி. இது ஒரு பொதுவான பிரச்னையாகும். இதற்கு வீட்டிலேயே தீர்வு தரக்கூடிய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.
இஞ்சியில் ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவை உள்ளன. இது ரத்த ஓட்டம் மற்றும் உடலில் ரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. இஞ்சி டீ குடிப்பதன் மூலம் உடல் வலி குறையும். ஒர் துணியில் இஞ்சி சாந்து வைத்து அதை தசை வலி மற்றும் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் கட்ட வேண்டும். இது வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
![]() |
ஆப்பிள் வினிகரில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தசை வலியைக் குறைப்பதுடன், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். மூட்டுவலி பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பில் வினிகர் கலந்து குடிக்கவேண்டும். மேலும் ஒரு வாளி தண்ணீரில் சிறிது ஆப்பிள் வினிகரை சேர்த்து குளிக்கவும். இது உடல் வலியை குறைக்கிறது.
![]() |
குழந்தைகள் முதல் கிழவன் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் தசை வலியைத் தீர்க்க உதவுகிறது. உடலில் பொட்டாசியம் அளவு குறைந்தால் தசை பலவீனம், சோர்வு, தசைப் பிடிப்புகள் உள்ளிட்டவை ஏற்படலாம். எனவே தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தசை வலிக்கு சிகிச்சையளிக்க உதவும்.
![]() |
கடுகு எண்ணெய் பழங்காலத்திலிருந்தே மசாஜ் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. தசை வலியின் சிக்கலைக் குணப்படுத்த கடுகு எண்ணெயை சூடாக்கி மசாஜ் செய்யவேண்டும். இந்த எண்ணெயில் மசாஜ் செய்யும்போது தசைகள் தளர்வாகவும், ரத்த ஓட்டம் சீராகவும் உதவும்.
தசை வலியைக் குறைக்க வெங்காயம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பச்சை வெங்காயத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதை பச்சையாக சாப்பிடுவதால் தசை வலி குறைகிறது.