தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/இமயமலை குறித்த அரிய தகவல்கள்..!

இமயமலை குறித்த அரிய தகவல்கள்..!

இமயமலை குறித்த அரிய தகவல்கள்..!


UPDATED : ஏப் 11, 2023 04:06 PM

ADDED : ஏப் 11, 2023 03:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2023 04:06 PM ADDED : ஏப் 11, 2023 03:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கண்டம் கடலில் நகர்ந்து ஆசியாவுடன் மோதியபோது உருவாகியது

இமயமலைத் தொடர். உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் முதல் இந்தியாவின் உயரமான மலையான

கஞ்சன்ஜங்கா வரை இமயமலைத் தொடரில் பலவித ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என

ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

இமயமலை ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கண்ட நகர்வு மற்றும் மோதல் காரணமாக உருவாகி இருந்தாலும்

இந்த மலை உலக வரலாற்றில் தாமதமாக உருவாகிய இளம் மலைகளில் ஒன்று என்பது பலர் அரியா விஷயம்.

இதைவிட பழமையான மலைகள் உலகில் உள்ளன.

இந்தியா, சீனா, திபெத், பாக்., நேபாளம், பூடான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் எல்லைகளுக்குள் அடங்கியுள்ளது

Image 1096451


இமையமலைத் தொடர்.

இந்திய மற்றும் யுரேசிய டெக்டானிக் அடுக்குகள் இன்னும் பூமிக்கடியில் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. எனவே

ஆண்டுக்கு 6 சென்டிமீட்டர் என்கிற கணக்கில் இமயமலை வளர்ந்துகொண்டே இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 8,864 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம் இமயமலைத் தொடரின் முடிசூடா

மன்னனாகத் திகழ்கிறது. உலகின் நிலப்பரப்பில் மிக உயரமான பரப்பு இந்த மலையின் உச்சிதான். குளிர்

காலத்தின்போது இதன் உச்சியில் -36 டிகிரி குளிர் காலநிலை நீடிக்கும். கோடை காலத்தில் 0 டிகிரிக்கு மேல்

காலநிலை அதிகரிக்காது. இதன் உச்சியில் மனிதன் உயிர்வாழ்வது சாத்தியமற்றது.

மணிக்கு 285 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு காற்று வீசும். ஆக்ஸிஜன் அளவு இங்கு மிகக் குறைவாக இருக்கும்.

இவ்வளவு ஆபத்தான சூழல் கஞ்சன்ஜங்கா, எவரஸ்ட் சிகரங்களில் உள்ளபோதும் ஆண்டுக்கு சராசரியாக 800 மலை

ஏறும் நிபுணர்கள் மலை உச்சிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சென்று திரும்புகின்றனர்.

காரக்கோரம் மலைத்தொடரில் உள்ள இரண்டாவது பெரியமலை கே2. 8611 மீட்டர் உயரம் கொண்ட கே2 மலை 18

ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கே2 மலை ஏற முயன்ற பலர் மரணம் அடைந்துள்ளனர்.

எவரஸ்ட் மலை 'கொமோலுங்மா' என திபெத்திய மொழியில் அழைக்கப்படுகிறது. இதற்கு 'உலகின் மாதா' எனப்

பொருள்.

1998-ஆம் ஆண்டு கினேட் ஹாரிஸன் என்கிற பிரிட்டனைச் சேர்ந்த பெண் கஞ்சன்ஜங்கா மலை உச்சிக்கு சென்று

சாதனை படைத்தார். அதுவரை மலை உச்சிக்கு ஆண்கள் மட்டுமே சென்று சாதனை படைத்த நிலையில்

இமயமலை உச்சியை அடைந்த முதல் பெண் என்கிற சாதனையை இவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us