தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கோடைக்கு இதமாக மோர் குடிப்பதால்... என்னென்ன கிடைக்கிறது?

கோடைக்கு இதமாக மோர் குடிப்பதால்... என்னென்ன கிடைக்கிறது?

கோடைக்கு இதமாக மோர் குடிப்பதால்... என்னென்ன கிடைக்கிறது?


UPDATED : ஏப் 10, 2023 02:56 PM

ADDED : ஏப் 10, 2023 02:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2023 02:56 PM ADDED : ஏப் 10, 2023 02:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடையில் பலரும் அதிகமாக விரும்பிச்சாப்பிடும் பானமாக மோர் உள்ளது. கொளுத்தும் கோடையில் நம் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும் போது, வெயிலின் தாக்கத்தை தவிர்த்து நீரேற்றமாக வைக்க உதவுகிறது. சர்க்கரை, கஃபைன் பானங்களை விட பல்வேறு ஆரோக்கிய சத்துக்கள் மோரில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

100 மி.லி., மோரில் 40 கலோரிகள் உள்ளன. இதில், வெண்ணெய் நீக்கப்படுவதால் பாலை விட குறைவான கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளன; புரதம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மோர் விரைவாக நம் உடலை குளிர்விக்கிறது. வெயில் கொளுத்தி எடுக்கும் கோடையில் சீரகம், புதினா மற்றும் உப்பு சேர்த்து ஒரு கிளாஸ் மோர், குடிக்கும் போது, தாகம் தணிவது மட்டுமின்றி, நம் உடலும் குளிர்ச்சியடைகிறது.

மோர், தயிர், உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையானது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களின் அளவை சமன் செய்கிறது. இதனால், மோர் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், நீரிழப்பை தடுக்க உதவுகிறது. மோரிலுள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் செரிமானத்துக்கு உதவுவதுடன், உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் தவிர்க்கப்படுவதுடன், குடல் இயக்கத்தை பராமரிக்கவும், வயிறு தொற்று, லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

இது அதிக ஆற்றலை அளிப்பதுடன், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மோரில் உள்ள ரிபோஃப்ளேவின் என்பது உங்கள் உடலின் ஆற்றல் உற்பத்தி அமைப்புகளுக்கு இன்றியமையாத வைட்டமின் பி ஆகும். இது உடலின் அமினோ அமிலங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது; புரதங்களை உருவாக்குகிறது.

Image 1095949


மோர் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். 100 மி.லி., மோரில் சுமார் 116 மி.கி., கால்சியம் உள்ளது. ஆரோக்கியமான எலும்பு அமைப்புக்கு கால்சியம் அவசியம். இது நமது எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற சிதைவு எலும்பு நோய்களைத் தடுக்க கால்சியம் உதவுகிறது. ரத்தம் உறைதல், தசைகள் சுருங்குதல் மற்றும் இதயம் துடிப்புக்கு கால்சியம் முக்கியத் தேவையாகும்.

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்குகிறது. எண்ணெய் மற்றும் காரமான உணவுகளால் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். குருமிளகு மற்றும் கொத்தமல்லி கலந்த ஒரு கிளாஸ் மோர் அமிலத்தன்மையின் அறிகுறிகளை உடனடியாக குறைக்க உதவுகிறது.

இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தொடர்ந்து மோர் குடிக்கும் போது, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது. இதனால், இதய ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. மோர் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்களால் நிறைந்துள்ளது. ஆனால் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. இது வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால், தேவையற்ற நொறுக்குக் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது உகந்த பானமாகும்.

மோரில் என்னென்ன சேர்க்கலாம்?

வீட்டில் தயாரிக்கப்படும் மோரில் சீரகம், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் மற்றும் சாட் மசாலா போன்றவற்றை உங்களின் விருப்பத்துக்கேற்ப சேர்க்கும்போது, சுவை மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளையும் மேம்படுத்துகிறது. கோடையில், இதை அப்படியே குடிக்கலாம். அல்லது ஐஸ் க்யூப்களை சேர்த்தோ, சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தோ குடிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us