தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கொதிக்க கொதிக்க குடிப்பதால் என்ன ஆகும்?

கொதிக்க கொதிக்க குடிப்பதால் என்ன ஆகும்?

கொதிக்க கொதிக்க குடிப்பதால் என்ன ஆகும்?


UPDATED : செப் 20, 2026 11:05 AM

ADDED : செப் 19, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 11:05 AM ADDED : செப் 19, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அல்லது காபி அருந்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. கொஞ்சம் சூடு குறைந்திருந்தாலும் வேண்டாமென கூறிவிடுவார்கள். ஆனால், பானங்களை கொதிக்க கொதிக்க குடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கை விளைவிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

டீ அல்லது காபி உடலுக்கு ஆபத்தானது கிடையாது. ஆனால், அவற்றை அவற்றை மிகவும் கொதிக்கும் சூட்டில் குடிப்பதுதான் பிரச்சனை. தொடர்ந்து சூடான பானங்களை குடிக்கும்போது, வாய் மற்றும் உணவுக்குழாயின் உள் சுவரில் மீண்டும் மீண்டும் வெப்பக் காயம் ஏற்படுகிறது. தினசரி இந்தப் பழக்கம் தொடரும்போது, அது நீண்டகாலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

டபிள்யூ.எச்.ஓ.,வின் ஐ.ஏ.ஆர்.சி., அமைப்பு, 65 டிகிரி-க்கு மேல் வெப்பநிலையில் அருந்தப்படும் பானங்களை மனிதர்களுக்கு புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தியுள்ளது. அதாவது டீ/காபியால் புற்றுநோய் வராது; மாறாக, அதிக வெப்பத்தால் உணவுக்குழாயில் ஏற்படும் தொடர் சேதம் இதற்கு காரணம்.

மிகவும் சூடான டீ அல்லது காபியை குடிக்கும் போது, உதடுகளில் எரிச்சல், நாக்கில் எரியும் உணர்வு, வாயில் எரிச்சல், தொண்டை வலி அல்லது எரிச்சல், உணவு விழுங்கும்போது சிரமம் மற்றும் உணவுக்குழாய் உள் சுவரில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, ஒரு பானத்தை குடிக்கும்போது தொண்டையில் எரியும் உணர்வு அல்லது வலி ஏற்பட்டால், அது மிகவும் சூடாக இருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி.

சில ஆய்வுகள், தொடர்ந்து அதிக வெப்பநிலையில் பானங்களை அருந்துபவர்களிடம் உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் அதிகமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், ஒரு கப் சூடான டீ குடித்தால் புற்றுநோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல. இந்த அபாயம், பல ஆண்டுகளாக தொடர்ந்து மிகவும் சூடான பானங்களை அருந்தும் பழக்கத்துடன் தொடர்புடையதாகவே ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீ, காபியை சூடாக ஊற்றியவுடன் குடிக்காமல், சில நிமிடங்கள் ஆறவிட்டு குடிக்க வேண்டும்.உதடு அல்லது தொண்டையில் எந்தவித எரிச்சலும் ஏற்படாத மிதமான வெப்பநிலைக்கு பிறகு அருந்தவும்.மிகவும் சூடாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது நேரம் காத்திருக்கவும்.​

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?


உணவு விழுங்கும்போது சிரமம் அல்லது வலிதொண்டை வலிமார்பு அசவுகரியம்,​காரணமில்லாமல் உடல் எடை குறைதல்​

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

எனவே, டீ, காபி அல்லது சூடான பானங்களை ரசித்து ருசித்து குடிப்பது தவறு அல்ல. ஆனால் அவற்றை கொதிக்கும் அளவுக்கு சூடாக இருக்கும் போதே குடிப்பது வாய் மற்றும் உணவுக்குழாயின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். எனவே பானங்களை சிறிது நேரம் ஆறவிட்டு குடிப்பது நம் உடல்நலத்திற்கு எப்போதுமே நல்லது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us