தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/ஐ.வி.எஃப்., எனும் செயற்கை கருத்தரித்தல் நடைமுறைக்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஐ.வி.எஃப்., எனும் செயற்கை கருத்தரித்தல் நடைமுறைக்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஐ.வி.எஃப்., எனும் செயற்கை கருத்தரித்தல் நடைமுறைக்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!


UPDATED : ஜூலை 27, 2023 07:14 PM

ADDED : ஜூலை 27, 2023 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 07:14 PM ADDED : ஜூலை 27, 2023 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல ஆண்டுகளாக கருவுற்றலில் பிரச்னை உள்ளவர்களுக்கு ஐ.வி.எஃப்., (IVF) எனும் செயற்கை கருத்தரித்தல் முறை குழந்தை பேறு வழங்கும் வாய்ப்பாக அணுகப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிக்கலான, செலவு பிடிக்கும் சிகிச்சை. இளம் பெண்களிடையே இதன் வெற்றி வாய்ப்பு அதிகம். ஐ.வி.எஃப்., சிகிச்சை நடைமுறைக்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

ஐ.வி.எப்., என்றால் பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் செயற்கையாக டெஸ்ட் டியூபில் இணைய வைத்து, அதனை அடைகாத்து சில நாட்கள் கழித்து அதனை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். அதன் பின்னர் அக்குழந்தை வழக்கமான செயலைப் போல் தாயின் கருப்பையில் வளரத் துவங்கி தொப்புள் கொடி மூலம் தேவையான உணவைப் பெறும்.

Image 1146510


ஐ.வி.எஃப் செயல்முறைக்கு 6 முதல் 8 வாரங்கள் எடுக்கும். சினைப்பைகளைத் தூண்டி கருத்தரிப்பதற்காக சினைமுட்டைகள் உருவாக்குதல், முட்டைகளை சேகரித்தல், கருத்தரித்தல், கருவுயிரின் தரத்தை ஆய்வு செய்தல், கருவுயிரை பெண்ணுக்கு மாற்றுதல் ஆகிய செயல்முறைகள் இதில் நடக்கும். ஐ.வி.எஃப்., செயல்முறையை தொடங்குவதற்கு முன்பு, கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் இங்கே...

மருத்துவ மதிப்பீடு மற்றும் ஆலோசனை


ஐ.வி.எஃப்., செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், கணவன், மனைவி இருவரும் ஒரு முழுமையான மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுவது அவசியம். இதில் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், கருவுறுதல் நிலை மற்றும் ஐ.வி.எஃப் வெற்றியைப் பாதிக்கக்கூடிய காரணிகள் கண்டறியப்படும்.

ரத்த பரிசோதனை, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அல்ட்ராசோனோகிராஃபி ஆகியவை மூலம் அடங்கும். ஐ.வி.எஃப்.,க்கான வெற்றி விகிதம் பெண்ணின் வயது மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடும்.

மரபணு சோதனை


ஐ.வி.எஃப்., சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் தம்பதிகளில் 10 - 20 சதவீதம் பேர் தோல்விகளை சந்திக்க நேரிடும். இதற்கு காரணம் மரபணு என்று கருதப்படுகிறது. கருவுயிரின் (Embryos) குரோமோசோம்களின் அசாதாரண நிலையால் இது ஏற்படுகிறது.

தற்போது அதனை சரி செய்யவும் நவீன தொழிநுட்பங்கள் உள்ளன. ஐ.வி.எஃப்பில் வளரும் கருவுயிரிலிருந்து சிறிய அளவு செல்களை எடுத்து குரோமோசோம் அசாதாரண நிலை சோதிக்கப்பட்டு, சாதாரண குரோமோசோம் எண் கொண்ட கருவுயிர் மட்டுமே பெண்ணுக்குள் செலுத்தப்படும். இந்த சோதனைக்கு பி.ஜி.டி., - ஏ என்று பெயர்.

கருமுட்டைகளை தூண்டுதல் மற்றும் முட்டைகளை சேகரித்தல்


Image 1146511
ஐ.வி.எஃப்பில் கருத்தரித்தலுக்கு தேவையான கருமுட்டைகளை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தூண்ட வேண்டும். அதற்கான மருந்துகள் தரப்படும். முட்டைகள் முதிர்ச்சியடையும் போது, கருமுட்டையிலிருந்து முட்டைகளை சேகரிக்க முட்டை ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

விந்தணு சேகரிப்பு மற்றும் கருத்தரித்தல்


முட்டையை மீட்டெடுக்கும் நாளில், ஆண் தனது விந்தணுக்களை வழங்க வேண்டும். ஆணுக்கு மலட்டுத்தன்மை அல்லது பிற பிரச்னை இருந்தால் இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி (ICSI) போன்ற மாற்று முறைகள் பயன்படுத்தப்படும்.

கரு பரிமாற்றம் மற்றும் கர்ப்ப கண்காணிப்பு


ஆய்வகத்தில் கருத்தரித்த பிறகு, கருக்கள் சில நாட்களுக்கு வளர்க்கப்படும். பின்னர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆரோக்கியமான கருக்கள் பெண்ணின் கருப்பையில் மாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும். பெண்ணின் வயது மற்றும் ஆரோக்கியம் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்து கருக்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us