தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/நாம் உணர்ச்சி வசப்படும்போது ஏன் கண்ணீர் வருகிறது?

நாம் உணர்ச்சி வசப்படும்போது ஏன் கண்ணீர் வருகிறது?

நாம் உணர்ச்சி வசப்படும்போது ஏன் கண்ணீர் வருகிறது?


UPDATED : பிப் 02, 2023 05:02 PM

ADDED : பிப் 02, 2023 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2023 05:02 PM ADDED : பிப் 02, 2023 03:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகிழ்ச்சி, குதூகலம், ஆதங்கம், துக்கம், இயலாமை என பலவித மன உணர்ச்சிகளை வெளிப்படுத்த கண்களில் இருந்து வெளியாகும் கண்ணீர் ஓர் கருவியாக உள்ளது. மேற்கண்ட உணர்ச்சிகளை நாம் பெறும்போது நம்மையறியாமல் கண்ணீர் எவ்வாறு சுரக்கிறது என யாராவது சிந்தித்ததுண்டா? இதற்கு மருத்துவ அறிவியல் கூறும் விடையைப் பார்ப்போம்.

கண்களின் உள்மடிப்பின் மேல் பகுதியில் லாக்ரிமல் சுரப்பி அமைந்துள்ளது. இந்த சுரப்பி உப்பு படிந்த கண்ணீரை உருவாக்கும். கண்கள் வறட்சி அடையாமல் பாதுகாக்கவும், கண்களில் தூசு படாமல் தவிர்க்கவும் லாக்ரிமல் சுரப்பி கண்ணீரை அவ்வப்போது சுரக்கும். கண்ணீர் கண்களில் ஈரப்பதத்தை நீட்டிக்க உதவும். இதனுடன் மியூகோஸ் திரவம் மற்றும் எண்ணெய் போன்ற திரவமும் சுரந்து கண்களைப் பாதுகாக்கும். தூங்கி எழும்போது கண்களில் உள்ள நுண் தூசுகள் அனைத்தும் இந்த பாதுகாப்பு திரவங்களால் வடிகட்டப்பட்டு கண்களின் ஓரத்தில் தேங்கி இருப்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.

ஒவ்வொரு முறையும் நாம் நமது கண்களை சிமிட்டும்போது இந்த திரவங்கள் கண்கள்மீது படிந்து பாதுகாக்கின்றன. உணர்ச்சிவசப்பட்டால் மட்டுமே கண்ணீர் அதிகளவில் சுரக்கும் என்றில்லை. தூசு அதிகம் உள்ள இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் கண்களைப் பாதுகாக்க கண்ணீர் அதிகமாக சுரக்க இந்த சுரப்பிகளுக்கு மூளை உத்தரவிடும். இந்த உத்தரவின் பேரில் கண்ணீர் வெளியாகும்.

Image 1062357


வெங்காயம் நறுக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் அமிலம் கண்களை பாதிக்காமல் இருக்க கண் சுரப்பிகள் தூண்டப்படும். இதனால் கண்ணீர் வெளியாகும். நாம் உணர்ச்சி வசப்படும்போது மூளையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதி கண் சுரப்பிகளுக்கு சிக்னல் அனுப்பும். இதனையடுத்து சுரக்கும் கண்ணீர் கண், மூக்கு வழியாக வெளியேறும். மற்ற தேவைகளுக்காக சுரக்கும் கண்ணீரைக் காட்டிலும் உணர்ச்சிப் பெறுக்கால் சுரக்கும் கண்ணீருக்கு சிறப்பு ஒன்றுண்டு.

இந்த வகை கண்ணீருடன் ஹார்மோன்கள், ப்ரொலாக்டின், பொட்டாசியம், மேங்கனீஸ் உள்ளிட்டவையும் வெளியேறும். இவ்வாறு இந்த கண்ணீரை வெளியேற்றிவிட்டால் மன அழுத்தம் குறையும். ஒரு துக்க சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனே அழுது கண்ணீர் விட்டுவிட்டால் மனநலம் பாதுகாக்கப்படும். இதுபோன்ற சமயங்களில் பெண்களை ஒப்பிடுகையில் ஆண்கள் கண்ணீர் விடுவது குறைவு. ஆனால் உணர்ச்சிகளை இருபாலரும் கட்டுப்படுத்தாமல் அழுதுவிடுவது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறது மருத்துவத் துறை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த கண்ணீர் விடுவதில் தவறில்லை. இது நமது உடல் நம்மை தற்காக்க மேற்கொள்ளும் ஓர் தன்னிச்சையான பாதுகாப்பு உத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us