/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சிக்கமகளூரில் பார்க்க வேண்டிய 3 இடங்கள்
/
சிக்கமகளூரில் பார்க்க வேண்டிய 3 இடங்கள்
ADDED : நவ 27, 2025 07:28 AM

சிக்கமகளூரு என்ற பெயரை கேட்டவுடன் பல சுற்றுலா தலங்கள் நினைவுக்கு வரலாம். இங்குள்ள சில முக்கியமான சுற்றுலா தலங்களை குறித்து எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
பாபா புடன்கிரி மலை பாபா புடன்கிரி மலை இயற்கையில் செழித்தது. இதன் உச்சியில் இருந்து பார்க்கும் தருணத்தை, யாரும் தங்கள் வாழ்வில் மிஸ் செய்யக்கூடாது. இந்த மலையின் மீது சிறிய கோயிலும் உள்ளது.
இந்த மலை தெற்குப்பகுதியில் பூங்கொத்து மற்றும் விவசாய நிலங்களைப் பார்க்க முடியும். இந்த இடத்தை எளிதில் அடையலாம். போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ளன.---
ஹொன்னமன்னா கெரே ஏரி சிக்கமகளூரின் புகழ்பெற்ற ஏரிகளில் ஹொன்னமன்னா கெரே ஏரியும் ஒன்றாகும். இங்கு படகு சவாரி உண்டு.
இதற்கு வெறும் 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும். மிக குறைந்த விலையில் படகு பயணத்தை அனுபவிக்கலாம். இங்கு ஏராளமான பறவை இனங்கள் இருக்கின்றன. இதில், வெளிநாட்டு பறவை இனங்களும் உள்ளன. இதை பார்த்தால் நேரம் போவதே தெரியாது.
முல்லையங்கிரி மலை சிக்கமகளூரில் உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்று முல்லையங்கிரி மலை. இது, 1,930 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இயற்கையின் அழகு, காடுகளால் மலை மிளிர்கிறது. இந்த மலையை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் பலர் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். இந்த மலையை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.
இந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்த பிறகு, அப்பகுதியில் சாலையோரங்களில் உள்ள ரோட்டு கடைகளில் கிடைக்கும் உள்ளூர் உணவுகளை ருசிக்கலாம். இங்கு சிக்கன் பிரியாணி, அப்பம், மீன் குழம்பு ஆகியவை மிகவும் ருசியாக இருக்கும். இவை, சுற்றுலா தலங்களுக்கு அருகிலேயே கிடைக்கும்.
இந்த கட்டுரையில் கூறப்பட்ட மூன்று இடங்களையும் குறைந்த செலவில் சுற்றிப்பார்க்க முடியும். இருப்பினும், செலவு என்பது நாம் செய்வதை பொறுத்ததே. உதாரணமாக, ஒரு வேளை சாப்பாடுக்கு 50 ரூபாயும் அல்லது 500 ரூபாயும் கூட செலவு செய்யலாம். இவை அனைத்தும் நம் கையிலே உள்ளது.
இந்த இடங்களை சுற்றிப்பார்க்க பொது போக்குவரத்து சரிவராது. எனவே, தங்கள் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் செல்வதே சிறந்த தேர்வாக இருக்கும்.

