sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

கேட்ட வரம் அளிக்கும் கோட்டை ஆஞ்சநேயர்

/

கேட்ட வரம் அளிக்கும் கோட்டை ஆஞ்சநேயர்

கேட்ட வரம் அளிக்கும் கோட்டை ஆஞ்சநேயர்

கேட்ட வரம் அளிக்கும் கோட்டை ஆஞ்சநேயர்


ADDED : மார் 24, 2025 11:52 PM

Google News

ADDED : மார் 24, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு நகருக்கு பல பெருமைகள் உள்ளன. மனதை மகிழ்விக்கும் சிறப்பான சுற்றுலா தலங்கள் மட்டுமல்ல, ஆத்ம சாந்தியை அளிக்கும் புராதன கோவில்களும் ஏராளம். அந்த வரிசையில், பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தரும் கோட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கலாமா.

பெங்களூரின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்குவது கே.ஆர்.மார்க்கெட். இங்குள்ள கலாசிபாளையத்தில் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரு அரண்மனை முன் பகுதியில் கோவிலை காணலாம். கே.ஆர்.மார்க்கெட் பஸ் நிலையம் மற்றும் மெட்ரோ நிலையத்தில் இருந்து வெறும் 100 அடி துாரத்தில் தான் உள்ளது.

கனவில் உத்தரவு


அந்த காலத்தில் பெங்களூரு, பசுமையான வனப்பகுதி, ஏரிகள் சூழ்ந்து மிகவும் செழிப்பாக இருந்தது. மன்னர் கெம்பேகவுடா, ஆஞ்சநேயரின் தீவிர பக்தர். தினமும் பூஜித்து வணங்கினார். 1637 - 38ல் கெம்பே கவுடாவுக்கு ஒரு கனவு வந்தது.

அதில் தனக்கு கோவில் கட்டும்படி ஆஞ்சநேயர் உத்தரவிட்டாராம். அதன்படி பெங்களூரு கோட்டை முன், கோவிலை கட்டி வழிபட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு கோட்டை முன், கோவில் இருப்பதால் 'கோட்டை ஆஞ்சநேயர்' என, பெயர் ஏற்பட்டது. இங்கு குடிகொண்டுள்ள ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித் தருவதில் பெயர் பெற்றவர்.

இதே காரணத்தால் பெங்களூரு சுற்றுப்பகுதி மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேண்டுதல் வைக்கின்றனர். அது நிறைவேறியதும் கோவிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 'வடை மாலை, வெற்றிலை மாலை' சாத்துவது ஐதீகம்.

தீய சக்தி விலகும்


வெண்ணெய் அலங்காரம், சந்தன அலங்காரத்தில் சுவாமியை காண இரண்டு கண்கள் போதாது. ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதுடன், மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம். அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடக்கின்றன.

ஹனுமன் ஜெயந்தி உட்பட சிறப்பு நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தினமும் காலையில் வியாபாரிகள், ஆஞ்சநேயரை கைகூப்பி வணங்கிய பின்னரே, வியாபாரத்தை துவங்குவது வழக்கம். இந்த வழியாக செல்லும் வாகன பயணியர், வாகனத்தை நிறுத்தி விட்டு, சுவாமியை வணங்கி செல்கின்றனர்.

தினமும் காலை 6:00 மணி முதல், 10:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். கோவில் குறித்து கூடுதல் தகவல் வேண்டுவோர், 98809 37304 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

www.kotenjaneya.oom என்ற இணைய தளத்திலும் தொடர்பு கொள்ளலாம். சனிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் இருக்கும்.

எப்படி செல்வது?

கே.ஆர்.மார்க்கெட் பெங்களூரின் முக்கியமான வர்த்தக பகுதி. அ

னைத்து இடங்களில் இருந்தும், இங்கு அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சி வாடகை வாகனங்கள் ஏராளம். மெட்ரோ ரயில் அருகிலேயே கோவில் உள்ளதால், மெட்ரோ ரயிலில் ஏறி, கே.ஆர்.மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இங்கு இருந்து நடந்தே கோவிலை அடையலாம்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us