/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்
/
குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்
ADDED : பிப் 05, 2025 09:43 PM

நகரங்களில் வாகனங்களின் சத்தம், இரைச்சல் நம் காதுகளில் வலியை ஏற்படுத்தும். ஆனால், ஷிவமொக்கா மாவட்டத்தில் மண்டகட்டே கிராமத்தினர் கொடுத்து வைத்தவர்கள். இங்கு 1.14 ஏக்கரில் அமைந்துள்ள குட்டித் தீவில், பல வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு, அவை எழுப்பும் சத்தம் காதுகளுக்கு ரீங்காரமாக ஒலித்து, புத்துணர்ச்சியை அளிக்கும்,
துங்கா நதிக்கரையில் வனப்பகுதிக்கும், நகரப்பகுதிக்கும் இடையே 1.14 ஏக்கர் பரப்பளவில் குட்டி தீவு அமைந்துள்ளது. நாட்டின் முக்கிய 20 பறவைகள் சரணாலயங்களில், மண்டகட்டே பறவைகள் சரணலாயமும் ஒன்றாகும்.
சோலாபூர் - மங்களூரு நெடுஞ்சாலை அருகில், துங்கா நதியில் பாய்வதால், பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலையை அளிக்கிறது. மே மாதத்தில் இனப்பெருக்க நோக்கத்துக்காக உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பறவைகள் மண்டகட்டேவுக்கு வருகின்றன. அப்போது, 5,000க்கும் மேற்பட்ட பறவைகளை ஒரே இடத்தில் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இங்கு டார்ட்டர்ஸ், மீடியன் எக்ரெட்ஸ், கார்மோரண்ட்ஸ், மெய்டன் எக்ரட், பீய்டு கிங்பிஷர், வூலி நெக் ஸ்டாக், நைட் ஹிரோன்ஸ், ஓபன் பில்டு ஸ்டார்க் உட்பட பல வகையான பறவைகள் வருகின்றன.
மழை காலத்தில் துங்கா நதியில் ஆர்ப்பரித்து தண்ணீர் ஓடும் போது, இந்த தீவு மூழ்கினாலும், மரங்களின் கிளைகளில் பறவைகள் 'ஹாயாக' அமர்ந்திருக்கும். எனவே, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இங்கு செல்வது சிறந்த நேரமாகும்.
அந்நேரத்தில் உங்களின் கேமராக்கள் மூலம் ஒரே இடத்தில் பல்வேறு பறவைகள் இருப்பதை 'கிளிக்' செய்யலாம். உயரமான இடத்தில் நின்று பார்க்கும் வகையில், கண்காணிப்பு கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது.
கோடை காலங்களில் மாநில வனத்துறை சார்பில் பறவைகளை அருகில் சென்று பார்க்கும் வகையில், படகு சவாரியும் ஏற்படுத்தி உள்ளனர்.
� மண்டகட்டே பறவைகள் சரணாலயமாக உள்ள குட்டித்தீவு.� மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள்.� உயரமான இடத்தில் நின்று பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம்.
- நமது நிருபர் -