/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மைசூருக்கு குறைந்தது சுற்றுலா பயணியர் வருகை
/
மைசூருக்கு குறைந்தது சுற்றுலா பயணியர் வருகை
ADDED : ஏப் 03, 2025 07:29 AM

மைசூரு : மைசூரு நகர், 'அரண்மனை நகர்' என, அழைக்கப்படுகிறது. சாமுண்டி மலை, அரண்மனை, மிருகக்காட்சி சாலை உட்பட, பல சுற்றுலா தலங்கள், புராதன கோவில்கள் உள்ளன.
இந்நகரம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருவது வழக்கம். தசரா சந்தர்ப்பத்தில் லட்சக்கணக்கானோர் வருவர்.
கொரோனா பரவியபோது, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்தது. அதன்பின் வந்த ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்தது. ஆனால் கடந்தாண்டு, இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் மூன்று முதல் 3.25 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருவது வழக்கம். 2024ல் இந்த எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை கூட தாண்டவில்லை.
நடப்பாண்டும் மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மைசூரில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்கள் குறித்து, பிரசாரம் செய்வதில் சுற்றுலாத் துறை பின்னடைவை சந்தித்துள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
'சுற்றுலா தலங்களுக்கு வெளி மாநில, நாடுகளின் சுற்றுலா பயணியரை ஈர்க்க, திட்டங்கள் வகுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா தலங்கள் குறித்து, அதிகமாக பிரசாரம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர்.