sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

/

பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்


ADDED : ஏப் 16, 2025 11:27 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூங்கா நகரமான பெங்களூரில், பார்த்து ரசிக்க, பொழுது போக்க அற்புதமான இடங்கள் உள்ளன. இந்த நகரின் அழகை காண, உள்நாடு நாடு, வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். மாதக்கணக்கில் தங்கி, சுற்றுலா தலங்கள், கோவில்கள் உட்பட, பல்வேறு இடங்களை கண்டு ரசித்து விட்டு, நிறைவான மனதுடன் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

'சிலிகான் சிட்டி' என, அழைக்கப்படும், பெங்களூருவின் சூழ்நிலை மிகவும் இனிமையானது. வார இறுதியில் தங்கள் குழந்தைகளுடன், ஜாலியாக பொழுது போக்க விரும்புவோர், முக்கியமான ஐந்து இடங்களுக்கு செல்லலாம்.

பெங்களூரு அரண்மனை


சுற்றுலா பயணியர் பார்க்க வேண்டிய இடங்களில், பெங்களூரு அரண்மனையும் ஒன்றாகும். அன்றைய கட்டட கலை வல்லுநர்களின் திறமைக்கு, உதாரணமாக அமைந்துள்ளது. மிகவும் அற்புதமாக தோன்றும் அரண்மனை, 1878ம் ஆண்டில் மைசூரு மஹாராஜா சாமராஜ உடையாரால் கட்டப்பட்டது.

அரண்மனையில் கோட்டை கோபுரங்கள், மரத்தால் வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு, கலை நுணுக்கமான சிற்பங்கள் அடங்கிய கலையரங்கம் உள்ளது. வெட்டிங் போட்டோ ஷூட் செய்ய விரும்புபவர்களுக்கு தகுதியான இடமாகும். திரைப்பட படப்பிடிப்புகளும் இங்கு நடப்பதுண்டு.

காலை 10:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை அரண்மனையை பார்க்க அனுமதி உள்ளது. உள்நாட்டு சுற்றுலா பயணியருக்கு 230 ரூபாய், வெளி நாட்டினருக்கு 460 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பெங்களூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பி.எம்.டி.சி., பஸ் வசதி உள்ளது. ஆட்டோ, கேப் போன்ற வாடகை வாகனங்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் தகவல் வேண்டுவோர் 080 - 2336 0818 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

லால்பாக்


பெங்களூரில் நீங்கள் பார்த்தே ஆக வேண்டிய மற்றொரு இடம் லால்பாக் பூங்கா. இது கர்நாடகா மட்டுமல்ல, இந்தியாவிலேயே பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகும். இது சாதாரண பூங்கா அல்ல. அழகான வண்ண மலர்கள் கொட்டி கிடக்கும் அற்புதமான இடம்.

இப்பூங்கா ஹைதர் அலியால் உருவாக்கப்பட்டது. அதன்பின் அவரது மகன் திப்பு சுல்தானால் மேம்படுத்தப்பட்டது. இங்கு பல ஆயிரக்கணக்கான அபூர்வ மரங்கள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், அலங்கார பூச்செடிகள் கண்களை கொள்ளை கொள்கின்றன. பல்வேறு வெளிநாடுகளின் தாவரங்களையும் இங்கு காணலாம்.

லால்பாக் பூங்காவில் உள்ள ஏரி, அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அமைதி, இயற்கை எழில் சூழ்ந்த அற்புதமான இடம்.

இந்த சூழ்நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணியர் வருகின்றனர். தினமும் காலை, மாலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்கள் நடை பயிற்சிக்கு வருகின்றனர். கோடை விடுமுறையை குட்டீஸ்களுடன் கொண்டாட ஏற்ற இடம்.

நேரம்: காலை 6:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை அனுமதி உள்ளது. பெரியவர்களுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இலவசம். கேமரா கொண்டு செல்ல 50 ரூபாய் கட்டணம். வில்சன் கார்டன் அருகில் லால்பாக் உள்ளது.

பி.எம்.டி.சி., பஸ்கள், வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் தகவல் வேண்டுவோர் 080 - 2657 1925, 080 - 2657 8184 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பஸ்லிகா தேவாலயம்


பெங்களூரின், சிவாஜி நகர் பஸ் நிலையம் அருகிலேயே செயின்ட் மேரிஸ் பஸ்லிகா தேவாலயம் அமைந்துள்ளது. இது பெங்களூரின் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். உயரமான கோபுரங்கள், வண்ண மயமான கண்ணாடி ஜன்னல்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.

செப்டம்பரில் மேரி மாதா பிறந்த நாளை முன்னிட்டு, பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பத்து நாட்களும் இப்பகுதி திருவிழா கோலம் பூணும். சுற்றுலா பட்டியலில் இந்த தேவாலயத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.

பெங்களூரு கோட்டை


உங்கள் பிள்ளைகளுக்கு வரலாற்றை அறிமுகம் செய்ய விரும்பினால், பெங்களூரின் கோட்டைக்கு அழைத்து செல்லுங்கள். மன்னராட்சியின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் கம்பீரமாக நிற்கிறது.

பெங்களூரு கோட்டையை, 1537ல் விஜயநகர சாம்ராஜ்ய அரசர் கெம்பேகவுடா கட்டினார். மண்ணால் கட்டப்பட்ட கோட்டையை, 18ம் நுாற்றாண்டில், ஹைதர் அலி கற்கோட்டையாக மாற்றி கட்டியதாக வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன என்றாலும், தன் கம்பீரத்தை இழக்கவில்லை. பெங்களூரு உருவாக அஸ்திவாரமாக இருந்ததே கோட்டைதான்.

நேரம்: காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை. இந்தியாவை சேர்ந்தர்கள் 15 ரூபாய், வெளி நாட்டினர் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் வேண்டுவோர் 63607 57500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திப்பு சுல்தான் அரண்மனை


பெங்களூரின் மத்திய பகுதியில், திப்பு சுல்தானின் அரண்மனை உள்ளது. கோடைக்காலத்தில் அவர் இங்கு ஓய்வு எடுக்க இந்த அரண்மனையை கட்டினாராம். தேக்கு மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகள் கொண்ட, அற்புதமான கட்டடமாகும்.

கடந்த 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. ஹிந்து மற்றும் இஸ்லாமிக் பாணியில் தோற்றமளிக்கிறது. அரண்மனை சுவர்களில் அலங்கார ஓவியங்களை காணலாம். அரண்மனை வளாகத்தில் வெங்கட ரமணர் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில், இதுவும் ஓன்றாகும்.

காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை அனுமதி உள்ளது. உள் நாட்டினர் 15 ரூபாய், வெளி நாட்டினர் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் வேண்டுவோர் 080 - 2670 6836 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us