
திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையில இருக்கிறது, 25 ஆண்டு கால வரலாறு கொண்ட, தென்காசி கூரைக்கடை நந்தினி மெஸ்.
வாழை இலையில சுடச்சுட இறங்குது பொன்னி அரிசி சோறு; பொன்னிறமா வதக்கின சின்ன வெங்காயத்தோட, பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்குற 'மட்டன் எண்ணெய் கறி'யை அப்படியே சோத்துல போட்டு பிசைஞ்சு உள்ளே தள்ளினா... அடடா... செம ருசி; அஞ்சு விரலையும் நல்லா உறிஞ்சு புரிஞ்சுக்காம நம்ம நாக்கு விடாது!
இதுகூட, மிளகு துாக்கலா கரிசல் மண் கலர்ல இருக்குற சுவரொட்டி தொக்கையும் தொட்டுக்கிட்டா, ருசியில குடல் கிறங்கிப் போறது சத்தியம். மோழி, கெமுரு, கனவாய்னு 8 வகையான மீன் குழம்பு வேற இருக்கு!
ஏப்பத்தோட இலையைப் பார்த்துட்டே கை கழுவிட்டு வெளியே வந்தா, செம வெயிலு! வேப்பமரத்தடியில ஒதுங்குனேன்; அங்கே, 'பராக்கிரம பாண்டியன் எழுப்புன நம்ம காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப் போறதுல சந்தோஷம்; ஆனா, 'திருப்பணி'ங்கிற பேர்ல தொன்மையான கல்துாண்கள் சிதைஞ்சிருச்சே'ன்னு ஆதங்கத்தோட ஒரு முதிய குரல்!
சின்ன வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, சீரகம், மிளகாய் துாள், மல்லி துாள், கரம் மசாலா, தேங்காய் பால் மணத்துடன்... மட்டன் எண்ணெய் கறி.
அது நீங்களா?
95854 44677