
சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் அல்ல... விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லுாரி யின் பி.எஸ்சி., முதலாமாண்டு மாணவியர் கொண்டாடும் தலைவர்கள் யார் தெரியுமா?
'உன் இலக்கு... தன் முனைப்பு சார்ந்தது; நோக்கம்... பொது நலன் சார்ந்தது; ஏழைக ளுக்கு இலவச பசுக்கள் வழங்குவது இலக்கு; இதன்வழியே சுயமுன்னேற்றம், கிராம பொருளாதாரம் காண்பது நோக்கம்!' - இப்படி சிந்திக்கத் துாண்டும் இறையன்பு ஐ.ஏ.எஸ்., என் வழிகாட்டி!'
- ச.லக் ஷண்யா
'பெண்கள் பெரிதாய்போற்றப் படாத 19ம் நுாற்றாண்டு; கணித மேதை சார்லஸ் பேபேஜ் முன்வைத்த நவீன கணினிக்கான கருத்தாக்கத்தை நம்பிக்கையுடன் ஏற்றாள் அடா லவ்லேஸ் எனும் லண்டன் தேவதை; முதல் கணினிக்கான புரோகிராம் உருவாக்கிய அவளே என் தலைவி!'
- ச.பாக்கியவதி
'ரோம் ஒலிம்பிக் - 1960ல் தனது 18 வயதில் வென்ற தங்கத்தை அமெரிக்க ஓஹியோ ஆற்றில் வீசி இனவெறிக்கு எதிரான தன் உணர்வை பதிவு செய்த முகம்மது அலி; 36 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் கமிட்டியால் மீண்டும் பதக்கம் பெற்ற அந்த குத்துச்சண்டை ஜாம்பவானே நான் வணங்கும் குரு!'
- ஜா.சா.ஷாரோன் ரோஸ்