sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

முதல்வரே... ஒரு நிமிஷம்!

/

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!


PUBLISHED ON : ஜன 26, 2025

Google News

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்தி: அரசுப் பேருந்தின் இருக்கை பெயர்ந்து பறந்த பெண் பயணி படுகாயம்!

அநீதி: பராமரிப்பற்ற அரசுப் பேருந்தால் பாதிக்கப்பட்ட தையல்நாயகிக்கு அரசு சார்பில் உதவியில்லை!

'அரசே... இதுதான் மக்களுக்கு நீ தரும் பாதுகாப்பா?

'கடலுார், புதுக்குப்பத்தில் இருந்து புவனகிரிக்கு சென்று கருவாடு விற்கும் நான், நவம்பர் 22, 2024 அதிகாலையில் சிதம்பரம் அரசுப் பேருந்தில் பயணம் செய்கையில், ஒரு வளைவில் பேருந்தின் பின்வாசல் வழியாக இருக்கையோடு துாக்கி வீசப்பட்டேன்!' - 61 வயது தையல்நாயகி.

கணவர் சந்திரன்: பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை, கடலுார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பின்னந்தலை, இடது முழங்கை எலும்பு முறிவிற்கு சிகிச்சை கிடைத்தது. என் புகார் அடிப்படையில் TN 32N - 3991 பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுனர் மேல், அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதாக வழக்கு பதிவாகியது.

அடுத்தநாள், அந்த தடத்திற்கு புதிய பேருந்து வந்துவிட்டது. தையல்நாயகி: இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இடுப்பு எலும்பில் ரத்தம் உறைந்ததால் இன்னும் நடமாட முடியவில்லை. 'பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் விடியல் பயணம்' என விளம்பரம் செய்கிறீர்களே... என்னை முடக்கிப் போட்டிருப்பதும் அதே விடியல் பயணம்தானே?அரசே... எனக்கு நீதி வழங்கு!






      Dinamalar
      Follow us