ADDED : ஆக 03, 2024 11:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதவிதமா, வித்தியாசமா நிறைய பப்பிகளை ஒரே இடத்துல பார்க்கணும்னா, கொடைக்கானல், மூஞ்சிக்கலில் உள்ள, தி கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில், இன்றும், நாளையும் நடக்கும் டாக் ஷோ போக மறந்துடாதீங்க.
தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷனுடன் இணைந்து, தி மெட்ராஸ் கெனைன் கிளப் மற்றும் தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில், ஆறு 'ரிங்'குகளில், பிரத்யேகமாக டாக் ஷோ நடக்கிறது.
மைனர் பப்பியில் இருந்து ஓபன்கிளாஸ் வரை, வயது வாரியாக பிரித்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் பப்பியின், அழகு, திறமையை மதிப்பிட, வெளிநாடுகளில் இருந்து அனுபவமிக்க வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். பார்வையாளராக 'ஷோ'வை கண்டு ரசிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 044- 26260 693/ 98840 46278 எண்களை தொடர்பு கொள்ளலாம்.