sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!

/

செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!

செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!

செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!


UPDATED : நவ 15, 2025 09:04 AM

ADDED : நவ 15, 2025 09:00 AM

Google News

UPDATED : நவ 15, 2025 09:04 AM ADDED : நவ 15, 2025 09:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சனி தோறும் வெளிவரும் செல்லப்பிராணிகளுக்கான இந்த சிறப்பு பக்கத்தை, 2023, டிச., 23ல் துவக்கியபோது, வாசகர்களின் பேராதரவு இந்தளவிற்கு இருக்குமென எதிர்பார்க்கவில்லை. வாசகர்களிடம் இருந்து குறிப்பாக குழந்தைகள், பெண்களிடமிருந்து 'செல்பி ஸ்டார்' பகுதிக்கு வாராவாரம் வந்து குவியும் கணக்கிலடங்கா போட்டோக்களே இதற்கு சாட்சி. அதனால்தான், வெற்றிகரமாக 100வது வாரமாக இந்த பக்கம் இன்று வெளியாகிறது.

தமிழகம் மட்டுமின்றி மாநிலம் கடந்தும், கடல் கடந்தும் வாழும் தமிழ்ச்சமூக செல்லப்பிராணி ஆர்வலர்கள் ஆர்வமுடன் அனுப்பி வரும் தகவல்கள், இப்பக்கத்தை இன்னமும் மெருகூட்டுவதற்கான உத்வேகத்தை அளிக்கின்றன.

வாரந்தோறும் 'செல்லமே' வாசித்து, உற்சாகத்துடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பின்னுாட்டம் அளிக்கும் வாசகர்கள், இப்பகுதி சிறப்பாக வெளிவர ஆலோசனை வழங்கி வரும் செல்லப்பிராணி ஆர்வலர்கள், கென்னல் கிளப் நிர்வாகிகள், டாக்டர்கள், ப்ரீடர்கள், விற்பனையாளர்கள் என, அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறி பாராட்டுகிறது, உங்கள் தினமலர்!

'காலர்'களுக்கு கவுரவம்

Image 1495232* நெதர்லாந்தில், பூனைகளின் ஓவியம், கலைப்பொருட்கள் அடங்கிய 'கேட்கேபினட்' அருங்காட்சியகம் செயல்படுகிறது.

* இங்கிலாந்து, லீட்ஸ் கோட்டையில் நாய்களுக்கு அணிவிக்கும் காலர்களுக்கு அருங்காட்சியகம் உள்ளது.

* இந்தியாவின் முதல் ஊர்வன விலங்குகளுக்கான பூங்கா, சென்னை, கிண்டியில் அமைந்துள்ளது.

* கர்நாடகா, மைசூருவில், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பூச்சியினங்களின் தொகுப்பு உள்ளது.

* அமெரிக்காவின் புகழ்பெற்ற நாய் பந்தயம், அதன் வரலாற்று குறிப்புகளுடன், ஓய்வு பெற்ற பந்தய நாய்கள், வாஸிலா அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படுகின்றன.

* இத்தாலியின் முதல் நாய் அருங்காட்சியகம் மாண்ட்ராகோன் நகரில் உள்ளது.

நினைவு சின்னம்


* விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கான 'லைக்கா' என்ற நாய்க்கு ரஷ்யாவில் சிலை உள்ளது.Image 1495233* 14 ஆண்டுகளாக, தன் உரிமையாளரின் கல்லறையை விட்டு செல்லாத, 'பாபி' என்ற பப்பிக்கு ஸ்காட்லாந்தில் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது.

* ராஜஸ்தான், தேஷ்னோக்கில் உள்ள கர்ணிமாதா கோவிலில், மக்கள் எலிகளை வழிபடுகின்றனர்.

* கேரளா, பரசினிகடவு முத்தப்பன் கோவிலுக்குள், நாய்கள் சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிக்கப்படுகிறது.

* உத்திரபிரதேசம், காளிசிங் நினைவு கோவிலில், செல்லப்பிராணிகளுக்கான பிரார்த்தனை, சடங்கு, வழிபாடுகள் நடக்கின்றன.

* முதன்முறையாக விண்வெளிக்கு சென்று, பாதுகாப்பாக திரும்பிய 'பெலிசெட்' என்ற பூனைக்கு, பிரான்சில், 2019ல் வெண்கல சிலை வைக்கப்பட்டது.

ரோபோட்டிக் பெட்ஸ்

Image 1495234* துபாயில், தங்கமுலாம் பூசப்பட்ட நாய்களுக்கான காலர்கள் விற்கப்படுகின்றன.

* செல்லப்பிராணிகளுக்கான ஆயுர்வேத மருந்து உற்பத்தியில், மும்பைதான் முதலிடத்தில் உள்ளது.

* பப்பியின் முடிக்கு புளூபெர்ரி பேஷியல், மண் குளியல் மசாஜ் சேவை, அமெரிக்காவில் உள்ள ஸ்பாக்களில் பிரசித்தம்.

* சிங்கப்பூரில், வயதானவர்களின் நலனுக்காக, ரோபோட்டிக் பெட்ஸ் விற்கப்படுகிறது.

* உலகின் மிகப்பெரிய பெட்ஸ்கடை, ஜெர்மனியில் உள்ளது. இங்கு, வெவ்வேறு இனத்தை சேர்ந்த, 2.5 லட்சம் செல்லப்பிராணிகள் உள்ளன.






      Dinamalar
      Follow us