
வி த்தியாசமான நிறங்களில் சிறகை விரித்து, சிலிர்த்து பறக்கும் பறவைகளை கண்டாலே, நமக்குள் உற்சாகம் தொற்றுக் கொள்ளும். ஆசையாக பார்த்து பார்த்து பறவை வாங்கி, அதற்கான கூண்டை தேர்வு செய்து, சத்துள்ள உணவை சாப்பிட கொடுத்தாலும், விளையாடுவதற்கென சில பொருட்கள்இருந்தால் தான், அவை மகிழ்ச்சியாக இருக்கும்.
நீங்கள் வீட்டில் இல்லாத போதும், அவை உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருக்க, சில புதிய வகை விளையாட்டு பொருட்கள், மார்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றை எப்படி பயன்படுத்துவது என, நம்மிடம் விளக்குகிறார், சென்னை, கே.கே., நகரில் உள்ள சாய்பெட்ஸ் கடை உரிமையாளர் சுதாகர்.
சுற்றி சுற்றி விளையாட சங்கிலியுடன் இணைக்கப்பட்ட இந்த விளையாட்டு பொருளை, கூண்டுக்குள் தொங்க விட்டால் சுற்றி கொண்டே இருக்கும். இவை சுற்றும் போது, உருளையில் இணைக்கப்பட்ட வளையமும் சுற்றும். இதை பார்க்கும் பறவை, அந்த வளையத்தில் நின்றபடியே சுற்றி விளையாட ஆரம்பிக்கும். இது, பறவை சோர்வில் இருந்து விடுபட உதவும். இதன் விலை 1,100 ரூபாய்.
குளித்து விளையாட டப்பாவில் தண்ணீர் அள்ளி குளிப்பதை காட்டிலும், தலையில் தண்ணீர் கொட்டும், ஷவரில் குளிக்கவே, குட்டீஸ் விரும்புவர். இதை போலவேபறவைகளும்,இந்த பாத் டப்பில் குளிக்கும் போது துள்ளலாடும்.
இதில், தண்ணீர் நிரப்ப பிரத்யேக பகுதி உள்ளது. பேட்டரியில் இயங்குவதால், 'ஆன்' செய்தால், ஷவரில் இருந்து தண்ணீர் வரும். இதில், நனைந்து விளையாடி கொண்டே குளிப்பதை பார்த்து ரசிக்கலாம். இதன் விலை ரூ.850.
மூளையை சுறுசுறுப்பாக்க வெவ்வேறு வண்ணங்களில், வித்தியாசமான வடிவங்களில் பொம்மைகள் கொண்ட 'ட்ரே' கடைகளில் கிடைக்கிறது. இதை மாற்றி வைத்தாலும், பறவை சரியாக எடுத்து பொருத்தும். இதேபோல், பந்துகளை கூடையில் உள்ள வளையத்தில், பறவையே எடுத்து போடுவது போன்ற பொம்மைகளும் கிடைக்கின்றன. ஸ்கேட்டிங் பொம்மையை கூண்டுக்குள் வைத்தால், பறவை விளையாடி கொண்டே இருக்கும். மூன்று பொம்மைகளும் சேர்த்து 1,500 ரூபாயில் வாங்கலாம்.
பயணத்திற்கு ஏற்றது பறவையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, ஹாரன்ஸ் என்ற பெல்ட் பொருத்திஎடுத்து செல்வர். இது, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பறவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
புதிதாக வாங்கியவை, பயிற்சி அளிக்காத பறவையை வெளியிடங்களுக்கு எடுத்து செல்ல, பிரத்யேக பை கடைகளில் கிடைக்கிறது. இதில், பறவைக்கான சில விளையாட்டு பொம்மை போட்டு எடுத்து செல்லலாம். இது, 1,500 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.