ADDED : மே 04, 2024 08:52 AM

கொளுத்துற வெயிலுக்கு தாக்குப்புடிக்க முடியாம, உங்க பெட் எதுவும் சாப்பிடாம அடம்புடிக்குதா? இனி அந்த கவலை வேண்டாம். ஹெல்தியா அதே சமயம், ரசிச்சு ருசிச்சு சாப்புட, நிறைய பெட் புட்ஸ் இருக்கு. நீர்ச்சத்து அதிகமா இருக்கற, ப்ரூட்ஸ், வெஜிடபிள்ஸ் வச்சு, ட்ரீட்ஸ் தயாரிச்சு, மதிய நேரத்துல சாப்பிட தரலாம்.
தர்பூசணி, வாழைப்பழம், ஸ்டாபெர்ரி, ப்ளூ பெர்ரி, ஆப்பிள் என எந்த ப்ரூட்ஸா இருந்தாலும், அதோட விதையை எடுத்துட்டு, கொஞ்சம் யோகர்ட் சேர்த்து, மிக்ஸில அரைச்சு ஜூஸ் ஆக்கிடணும். வெவ்வேற ஷேப்ல, கடைகள்ள கிடைக்கற மோல்ட்ல, இந்த ஜூஸ் உத்தி, ப்ரீசர்ல வைச்சிடணும். இதுல, சால்ட், சுகர் சேர்க்க கூடாது.
டேஸ்ட்டுக்காக ஹனி கொஞ்சம் சேர்த்துக்கலாம். மூணு மணி நேரம் கழிச்சி, அது ப்ரீஸ் ஆகிடும். மதிய நேரத்துல இதை சாப்புட கொடுத்தா, உடனே புட் பவுல் காலியாகிடும்.இது பெட் புட்.... டேஸ்ட் பண்ணிடாதீங்கோ!