ADDED : பிப் 07, 2025 10:33 PM

''குடும்ப விழாக்களில், பப்பிக்கான ஆடைக்கும் பட்ஜெட் ஒதுக்குவது டிரெண்டாகிவிட்டது,'' என்கிறார், சென்னையை சேர்ந்த ஷெரில்.
'செல்லமே' பக்கத்திற்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
என் பப்பிக்கு பேஷன் ஆடை தயாரிக்கலாம் என்ற ஆர்வத்தில் வெறும் 500 ரூபாய் பட்ஜெட்டில், மெட்டீரியல் வாங்கி, தைத்து அணிவித்தேன். இது தனித்துவமாக இருப்பதாக பலரும் பாராட்டியதால், 2018ல், பிளாசம்4 (Flawsome4) என்ற, பிராண்டை உருவாக்கினேன். வாடிக்கையாளர் விரும்பும் கலர், டிசைன், மெட்டீரியலில், கஸ்டமைஸ்டு செய்வதால், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தற்போது ஆர்டர்கள் வருகின்றன.
திருமணம், குடும்ப விழாக்களில், வீட்டிலுள்ளோரின் ஆடைக்கேற்ற நிறத்திலேயே, பப்பி, பூனைக்கும், டிரஸ் அணிவிக்க, பலரும் விரும்புகின்றனர். இதற்கு, தனி பட்ஜெட் ஒதுக்குகின்றனர். இதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், பெட் பேஷன் துறைக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
செல்லப்பிராணிகளுக்கு, காலர், பந்தனா, டிரஸ், கிளிப் ஆகியவை தயாரிக்கிறேன். இதில், டிரஸில், கழுத்தில் இருந்து மாட்டிவிடுதல், காலர் போல கட்டிவிட்டு உடலை மறைப்பது போன்ற மாடல், ஒட்டிக்கோ கட்டிக்கோ மாடலில் வெல்குரோ பொருத்தப்பட்டவை என, பல வெரைட்டி உள்ளன.
ஆண் பப்பி, மியாவுக்கு, நாம் கழுத்தில் 'டை' கட்டுவது போன்ற மாடலில், பந்தனா என்ற ஆடை உள்ளது. இது, காட்சிக்கு அழகாக இருக்கும். பொதுவாக, காட்டன், ரேயான் நெக்ஸ்ட் வகை மெட்டீரியல் தான் பயன்படுத்துகிறேன். இதை குளிர்காலத்திற்கும் பயன்படுத்தலாம்.
ஹேர் கிளிப், பேண்ட் வகை அலங்கார பொருட்கள், ஆடைக்கேற்ற டிசைனில் காம்போ செட்டாகவும் தயாரிக்கிறேன். செல்லப்பிராணிகளுக்கான அலங்கார பொருட்கள், 60 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரையும், ஆடைகள் 1,000 ரூபாயில் இருந்து, வாடிக்கையாளர் தேர்வு செய்யும் டிசைனை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். பொறுத்து மாறுபடும். அடிக்கடி புது மாடல்களை அப்டேட் செய்வதால், நிரந்தர கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆறு ஆண்டுகளாக இத்துறையில், நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. ஆன்லைன் பிளாட்பார்மை மட்டுமே நம்பி, என் பிராண்டை அறிமுகம் செய்து, மாதம் குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறேன். ஆர்வமிருப்போர், தயங்காமல் இத்துறையை தேர்வு செய்யலாம்.