ADDED : ஜூன் 13, 2025 10:31 PM

கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், அனைத்து இன நாய்களுக்கான சாம்பியன்ஷிப் கண்காட்சி வரும் 22ம் தேதி, நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
ஒவ்வொரு இன பப்பிக்கும் வெவ்வேறு விதமான தனித்திறன் இருக்கும். இதற்குமுறையாக பயிற்சி அளித்து வெளிக்கொணர வாய்ப்பளித்தால் தான், அந்த இனத்திற்கான அடையாளத்தை மீட்டெடுக்க முடியும். இதை ஊக்குவிக்கும் பொருட்டு, கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், 3 மற்றும் 4 வது அனைத்து இன நாய்களுக்கான சாம்பியன்ஷிப் கண்காட்சி, வரும் 22 ம் தேதி நடக்கிறது. மூன்று பேர் கொண்ட நடுவர் குழு, பப்பியின் திறனை மதிப்பிடுவர். மொத்தம் 11 பிரிவுகளில், இன வாரியாக பப்பிகளுக்கான கண்காட்சி நடக்கிறது.
இந்திய இன பப்பிகளுக்கு, பிரத்யேக போட்டி உள்ளது. இதில், வெற்றி பெறும் 21 பப்பிகளுக்கு, சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் நடுவர்களின் மனதை கவரும் முதல் எட்டு பப்பிகளுக்கு, கோப்பை, சான்றிதழ் காத்திருக்கிறது. இதுதவிர, சிறந்த கையாளுநர், சிறந்த ஜூனியர் கையாளுநர் என, ஐந்து பிரிவுகளில், முதல் இரு பரிசு பெறுவோருக்கு, வெற்றி கோப்பை வழங்கப்படுகிறது. இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, 95852 66566/ 98422 30865என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.