sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!

/

கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!

கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!

கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!


ADDED : ஜூன் 07, 2025 09:03 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மெல்லிய ரீங்காரத்தில் பாடி கொண்டு சொன்னதையே திரும்ப சொல்லிக்காட்டி, தோளில் வந்தமர்ந்து கதை கேட்கும் இந்த 'கைக்கூ' பறவை உங்களுடன் இருந்தால் தனிமையை துரத்தியடிக்கலாம்,'' என்கிறார், கோவையை சேர்ந்த பறவை பயிற்சியாளர் சுஹைப்.

கைக்கூ பறவை பற்றி, செல்லமே பக்கத்திற்காக இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

கைக்கூவை பறவை, அதன் தலை, வயிற்று பகுதியில் உள்ள நிறத்தின் அடிப்படையில் இரு வகையாக பிரிக்கலாம். தலையில் கறுப்பு நிறமாக இருந்தால், 'பிளாக் ஹெட்டட்', அடி வயிறு பகுதி வெள்ளையாக இருந்தால் 'ஒயிட் பெல்லிடு' என்பர். ஆரஞ்ச், மஞ்சள், பச்சை என பல வண்ணக்கலவையில், சிறகு விரிக்கும்.

இது அதிக உயரம் வளராது என்பதால், சிறிய கூண்டு போதுமானது. பிறந்து 28 நாட்களுக்கு பின், தாய் தாயிடம் இருந்து பிரித்து, இதற்கு உணவு வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு பின், இவை தாமாக உணவு சாப்பிட பழகி கொள்ளும். இச்சமயத்தில், பயிற்சியை துவக்க வேண்டும். உணவு கொடுக்கும் போதே, இதை கையில் வைத்திருப்பதால், அவை உரிமையாளருடன் எளிதில் பழகிவிடும்.

கூப்பிட்டால் தோளில் வந்து அமர்வது, அதனுடன் உரையாடினால் பதிலுக்கு அதன் மொழியில் பேசுவது, சின்ன சின்ன சத்தங்களை 'மிமிக்ரி' செய்வது, வீட்டிற்குள் சுதந்திரமாக பறப்பது போன்ற விஷயங்களை, வீட்டிற்குள் வைத்து பழக்கப்படுத்தலாம். வெளியே எடுத்து செல்லும் போது, பறவைக்கான 'ஹாரன்ஸ்' கயிறு பொருத்துவது அவசியம்.

குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே சுதந்திரமாக சுற்றி திரியும், திடீரென வெளியில் பறந்துவிட்டால், அவற்றிற்கு வீட்டை அடையாளம் காண தெரியாது; பத்திரமாக கையாள வேண்டும். குட்டீஸ் உடன் சிக்குபுக்கு விளையாடும் அளவுக்கு, கைக்கூ நெருங்கி பழகும் என்பதால், மொபைல் போன் தாக்கத்தில் இருந்து விடுபட, இதை வளர்க்கலாம்.

வயதானவர்கள், தனியாக வீட்டில் இருப்பவர்கள், இதை வளர்த்தால், கூடவே ஒருவர் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது, பாடிக் கொண்டே, சத்தங்களை மிமிக்ரி பண்ணியபடி, தோளில் அமர்ந்து விளையாட அழைப்பதால், எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும், நொடியில் மறைந்துவிடும். இவ்வாறு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us