ADDED : ஜன 04, 2025 12:47 AM

''வாரம் முழுக்க அடுப்பங்கரையிலேயே காய்ந்து, ஒருநாளாவது சமையலறைக்கு பூட்டு போட நினைப்பவர்களுக்கு, ஓட்டல் உணவு வரப்பிரசாதம் தான். இதையும், போனில் ஆர்டர் செய்து வீடு தேடி வந்தால் கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது.
இதேபோல, ஆன்லைனில் ஆர்டர் செய்தால் கிடைக்கும் வகையில், செல்லப்பிராணிக்கான பிரஷ் புட் தயாரிக்க வேண்டுமென்ற உந்துதலால் உருவானதே 'டாக் மீல்' நிறுவனம்,'' என்கிறார் அதன் நிறுவனர் கிஷோர்குமார்.
இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கிறோம். எங்கள் டாக் மீல் (Dog Meal) இணையதளம், அமேசான் தளத்திலும், உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். பப்பிகளுக்கான அசைவ உணவில் மட்டும், 11 வெரைட்டிகளும், சைவ உணவில், காய்கறிகளுடன் முட்டை சேர்த்தும் தயாரிக்கிறோம். எங்களின் தனித்துவமான ரெசிபி,'மீட் பால்' தான். கிரேவி வடிவில் இருக்கும். இதை, சாதத்துடன் சேர்த்தோ, தனியாகவோ கொடுத்தால், பப்பி ருசித்து சாப்பிடும். அசைவ உணவில், 70 சதவீதம் இறைச்சி, 30 சதவீதம் பப்பிக்கான மற்ற சத்துகள் கொண்ட உணவு பொருட்கள் இருக்கும். இதை, 121 டிகிரி வெப்பநிலையில், 40 நிமிடங்கள் வரை, கிருமி நீக்கம் செய்து பிறகு, காற்று புகாத டப்பாவில் அடைப்பதால், 3 ஆண்டுகள் வரை கெடாது.
ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணிகளுக்கு செல்லும் போது, எளிதில் கெடாத சில உணவுகளை கொண்டு செல்வர். இந்த பார்முலா அடிப்படையில், கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைப்படி, சில ஆய்வுகளுக்கு பின், இந்த உணவு தயாரிக்கும் பிசினஸில் களமிறங்கினோம்.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ட்ரையாக இருப்பதால், அதை பப்பி விரும்பி சாப்பிடுவதில்லை. இதனால்சமைக்கப்பட்ட, எளிதில் கெடாத, பப்பியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் நிரம்பிய, பிரஷ் புட் தயாரிக்க திட்டமிட்டோம். 2017 ல் துவங்கி தற்போது வரை, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஹாப்பி கஸ்டமர்கள் இருக்கின்றனர்.
'சாம்பிள்' உணவு கிடைக்கும் என்பதால், ஒருமுறை பப்பிக்கு வாங்கி கொடுத்து, பின் ஆர்டர் செய்யலாம்.