sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

குதிரையேற்ற பயிற்சி; 'ஆட்டிசம் கிட்ஸ்'க்கு தெரபி!

/

குதிரையேற்ற பயிற்சி; 'ஆட்டிசம் கிட்ஸ்'க்கு தெரபி!

குதிரையேற்ற பயிற்சி; 'ஆட்டிசம் கிட்ஸ்'க்கு தெரபி!

குதிரையேற்ற பயிற்சி; 'ஆட்டிசம் கிட்ஸ்'க்கு தெரபி!


ADDED : மே 11, 2024 10:16 AM

Google News

ADDED : மே 11, 2024 10:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கோவையில ஒரு குதிரைப்பயிற்சி மையம் துவங்கணும்கிற கிரேஸ்ல,10 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது தான், 'அலெக்சாண்டர் எக்வெஸ்ட்ரியன் கிளப்'. இங்கிருந்து நிறைய சேம்பியன்ஸ உருவாக்கியிருக்கோம்'' என்கிறார், அதன் நிர்வாகி பாலாஜி.

கோவையோட பீளமேட்டுல, கிட்டத்தட்ட ஒன்றரை ஏக்கர்ல, 30குதிரை தங்குறதுக்கு'ஸ்டேபிள்', பயிற்சிக்கான பிளே கிரவுண்ட், குரூமிங் சென்டர்னு, பிரம்மாண்டமா இருக்கு அலெக்சாண்டர் எக்வெஸ்ட்ரியன் கிளப். மார்வாரி, போனி, தரோபிரெட்-னு,நம்மூரு வெரைட்டி மட்டுமில்லாம, வெளிநாட்டு ப்ரீட்சும் இங்க இருக்கு. இதை எப்படி பராமரிக்கிறீங்கன்னு கேட்டதும், குதிரைப்பண்ணையை சுத்திக்காட்டி பேச ஆரம்பிச்சார்.

''காலையில 5:00 மணிக்கே பிரேக்பாஸ்ட் தொடங்கிடும். அதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட, 20 மினிட்ஸ் வரைக்கும், குரூமிங் பண்ணுவோம். குதிரையோட ஸ்கின்ன, டெய்லி ஸ்கிரப் பண்ணாதான் பளபளப்பா இருக்கும். பேசிக்கா இது, காட்டுல வாழுற விலங்கு. இதை செல்லப்பிராணியா வளக்குறதால, அதோட புட் சிஸ்டமே மாறிடுச்சு.

குதிரைக்கு மேய்ச்சல் தான், ரொம்ப பிடிக்கும். இதனால, டெய்லி நாலு வேளை சாப்பாடு கொடுக்குறோம். இதுல, ரெண்டு வேளை பச்சை புல்லு தான். சோயா, பார்லி, கொள்ளுன்னு 12 தானியங்கள் சேர்த்து, 'பெல்லட்டி'ங்கற ஒரு புட் தயாரிக்கிறோம். இதை மத்த ரெண்டு வேளைக்கும் சாப்பிட கொடுப்போம்.

மார்னிங் 6:00 மணியில இருந்தே குதிரைப்பயிற்சி வகுப்பு துவங்குது. கிளாஸ் இல்லாட்டியும், டெய்லி மார்னிங், ஈவினிங் ஒரு மணி நேரமாவது கிரவுண்டுல குதிரை நடந்துக்கிட்டே இருக்கும். பயிற்சிக்கு வர்ற ஸ்டூடண்ட்ஸ், குதிரையோட ரொம்ப அட்டாச் ஆகிடுவாங்க.புதுசா வாங்கிட்டு வர்ற குதிரையை, பயிற்சி கொடுத்து பழக்குறதுக்குன்னு, 6 ட்ரைனர்ஸ் இருக்காங்க. பார்க்க ஜைஜான்டிக்கா இருக்கற குதிரையை, முறையா ட்ரைன் பண்ணா, குழந்தை மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிடும்.ஓனர் என்ன சொன்னாலும் கேக்கும். இதனாலயே, கிட்ஸ் அதிகம் குதிரையோட இருக்க ஆசைப்படுறாங்க.

குதிரை பயிற்சி எடுத்துக்கும் போது, உச்சந்தலையில இருந்து பாதம் வரைக்கும், பிளட் சர்க்குலேஷன் இருக்கும். நர்வ்ஸ் ரொம்ப ஆக்டிவ்வா இருக்கறதால, 'ஆட்டிசம்' கிட்ஸ்க்கு, இது 'தெரபி'யா இருக்கறதா டாக்டர்ஸே ரெக்கமெண்ட் பண்றாங்க,'' என்றார்.






      Dinamalar
      Follow us