ADDED : டிச 28, 2024 06:46 AM

நான், மனைவி வைஜெயந்தி இருவரும் மருத்துவர்கள். பீகில் பப்பியை (கூகுள்), நண்பர் ஒருவர் பரிசளித்தார். இது குட்டியாக, துறுதுறுவென இருக்கும். மிகவும் புத்திசாலி. மூன்று ஆண்டுகளுக்கு முன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் என் அம்மா மைதிலி, ஹாலில் வழுக்கி விழுந்துவிட்டார். அம்மாவையே சுற்றி சுற்றி வந்ததோடு, வராண்டாவில் நின்று கொண்டு வேகமாக குரைத்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இது நடந்து கொள்வதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, அம்மா கீழே விழுந்தது தெரியவந்தது. உடனே மருத்துவமனை அழைத்து சென்று, தகவல் அளித்தனர். தற்போது அம்மா உயிருடன் இல்லை. ஆனால், இச்சம்பவத்தை என்னால், மறக்கவே முடியாது.
இப்படி, செல்லப்பிராணி வளர்க்கும் ஒவ்வொருவருக்கும், மறக்க முடியாத பல கதைகள் இருக்கும். இதை பசுமையாக நினைவுப்படுத்தி கொள்ளவும், பிறருடன் பகிரவும், வாய்ப்பளிக்கும் வகையில், 'செல்லமே' பக்கம் அமைந்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக பக்கம் வெளியிடும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
- டாக்டர். வெங்கடகிருஷ்ணன், இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர், கோவை.

