ADDED : அக் 25, 2025 06:42 AM

உ ங்கள் பப்பியின் ஆற்றல், திறமைக்கு அங்கீகாரம் ஏற்படுத்தி தரவும், தனித்திறனுக்கு மகுடம் சூட்டவும், பெங்களூருவில் நவம்பர் மாதம் 1, 2ம் தேதிகளில், நாய் கண்காட்சி நடக்கிறது.
பெங்களூரு கெனைன் கி ளப் சார்பில், 59, 60வது சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி, நவம்பர் 1ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, சிலிக்கான் சிட்டி கென்னல் கிளப் சார்பில், 131, 132வது சாம்பியன்ஷிப், ஒபீடியன்ஸ் கண்காட்சி, நவம்பர் 2ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிகழ்ச்சிகளும், ஏலஹங்காவில் உள்ள, ஈஷா பார்ம்ஸ் அண்டு லெஷரில் நடக்கிறது. கண்காட்சியில், நடுவர்களின் மதிப்பீடுகளை வெல்லும் பப்பிகளுக்கு, மகுடம் காத்திருக்கிறது. உங்கள் பப்பி இக்கண்காட்சியில் பங்கேற்க www.dogsnshows.com இணையதளத்தில், நாளைக்குள் முன்பதிவு செய்யலாம். பார்வையாளராக பங்கேற்றும் பப்பிகளை ரசிக்கலாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

