இதுதான் வெற்றியின் ரகசியம்! சொல்கிறார் 'ரூபன்ராஜ்'
இதுதான் வெற்றியின் ரகசியம்! சொல்கிறார் 'ரூபன்ராஜ்'
ADDED : ஆக 10, 2024 11:05 AM

''நாய்களில், ஒவ்வொரு இனத்துக்குமான உடற்கூறு அமைப்பு தனித்தன்மையானது. கண்காட்சியில் மிகப்பொருத்தமான முறையில் அதை வெளிப்படுத்தி நடுவரை கவர்வது, அந்த நாயை கையாள்பவரின் கையில்தான் இருக்கிறது,'' என்கிறார் கோவை, போத்தனுாரைச் சேர்ந்த, 'டாக் ஷோ ஹேண்ட்லர்' ரூபன்ராஜ் நெல்சன்.
நீங்கள் கையாளும் முறை பற்றி...
உரிமையாளரோ, பயிற்சியாளரோ பழக்கப்படுத்துன புது நாய்கள்தான், ஹேண்ட்லர்கிட்ட வரும். சில நேரங்களில் பயிற்சியாளரே, கண்காட்சியில் அந்த நாயை கையாண்டவராகவும் இருப்பார். புதிதாக ஒரு இன நாயை கையாளும்போது, 'ரிங்' உள்ளே போவதற்கு, 20 நிமிஷத்துக்கு முன்னாடி தான், 'பப்பியை' சந்திப்பேன்.கொஞ்சம் நேரம் அதோட விளையாடியபின், என்மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவேன். அதோட அனாடமியை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என தெரிந்து கொண்டால் போதும்.
சில நேரங்களில் பப்பி ஒத்துழைக்காது. அப்போது, அந்த நாயின் 'மைண்ட் செட்'டை மாற்ற வேண்டுமே தவிர, அடிப்பது, நிர்பந்திப்பது கூடாது. கொஞ்சம் 'ட்ரீட்ஸ்' கொடுத்து, நாம சொல்றதை செய்ய வைக்கறதுல தான் ஹேண்டுலருக்கான இலக்கே இருக்குது. எந்த இனத்தை, எப்படி வெளிப்படுத்த வைக்க வேண்டுமென்ற வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில், நல்ல பப்பியை கூட, 'சேம்பியன்' ஆக்க முடியாம போகலாம்.
அதென்ன பார்முலா?
*நாய்களை பொறுத்தவரைக்கும், 11 குரூப்பா பிரிச்சி வச்சிருக்காங்க. இதுல வர்ற பப்பியோட உடற்கூறு மாறும். ராஜபாளையம், ராட்வீலர் மாதிரியான நாய்களை, காட்சிப்படுத்தும் போது வாலை துாக்கி காட்டணும்; லேப்ரடார், 'ப்ரீஸ் போஸ்'ல இருக்கணும்; டாஸ்ஹவுன்ட் ப்ரீடோட வால் அதோட உடம்புக்கு நேரா நீட்டி காட்டணும்.
*அமெரிக்கன் காக்கஸ்பேனியல்ல 'மேல்' ப்ரீடா இருந்தா 12-15 இஞ்ச், 'பீமேல்' ப்ரீட்னா 10-13 இஞ்ச் தான் இருக்கணும். இதைவிட பெரிதாக இருந்தால் தகுதியிழப்பு செய்யப்பட்டுவிடும். பீகில் பப்பியோட காது அளவு சரியா இருக்கணும். இப்படி ஒவ்வொரு இனத்தையும் மிகச்சரியான உற்கூறோட பராமரித்தால்தான், அதோட பெடிகிரி அழியாம பாதுகாக்கப்படும்.
*ஐரீஸ் ஷெட்டர், ஸ்னவ்சர், நியூபவுண்ட்லேண்ட், புல்மஸ்தீப், டோபோ அர்ஜென்டினா, பிரெஞ்ச் மஸ்தீப் போன்ற ப்ரீட்ஸ, இப்போ கண்காட்சிகளில் அதிகமாக பார்க்க முடிகிறது. தரமான உடற்கூறுகளுடன் இருக்கும் ஒரு பப்பிக்கு பயிற்சி அளித்து, காட்சிப்படுத்தி, சேம்பியன் ஆக்கும் வரைக்கும், ஒரு கையாளுனராக நிறைய விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும்.

