ADDED : டிச 20, 2024 06:36 PM

செல்லப்பிராணிகளுக்கான தத்தெடுப்பு முகாம், விழிப்புணர்வு நிகழ்வுகளில், அதிகம் பங்கேற்கும் முகமாக இருப்பவர், நடிகர் சந்தோஷ் பிரதாப். 'செல்லமே' பக்கத்திற்காக, இவரை தொடர்பு கொண்ட போது, நம்மிடம் பகிர்ந்தவை:
நான், அரக்கோணம், ரயில்வே பள்ளியில் தான் படித்தேன்.ஏழாம் வகுப்பு முடிக்கும்வரை,அம்மா வெளியில் விளையாட அனுமதித்ததில்லை. நடனம், ஓவியம் வரைவது தவிர, வீட்டிற்குள் வலம் வரும்எட்டுக்கால் பூச்சி, பல்லி, வெட்டுக்கிளியை பின்தொடர்வது, அதற்காகநேரம் செலவிடுவது,அவற்றின்ஒவ்வொரு அசைவையும்கவனிப்பது தான்பொழுதுபோக்காக இருந்தது. இதனால், இப்போதும் பூச்சிகள் மீது தனி பிரியம் உண்டு.
ஒருமுறை, கிரிக்கெட் விளையாடுகையில், உள்ளங்கை அளவுள்ள வெட்டுக்கிளி ஒன்று கீழே இருந்தது. அதை கையில் வைத்து தடவி கொடுத்தேன். நண்பர் ஒருவர், அதை கீழே வீசியதும், துடித்து போய்விட்டேன். கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி விட்டு, மொத்த கூட்டமும், அந்த வெட்டுக்கிளியை பின்தொடர்ந்த நாட்களை மறக்கவே முடியாது.
ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு அருகே, ஏரி இருந்தது. அங்கு வரும், வித்தியாசமான பறவைகளை பார்க்க, நண்பர்களுடன் அடிக்கடி செல்வதுண்டு.கோழி, ஆடு, மாடு, உடும்பு, பறவை, குதிரைஎன,நண்பர்கள் வீட்டில் வளர்த்த,செல்லப்பிராணிகளுடன்அதிகநேரம் செலவிட்டிருக்கிறேன்.
இதேபோல,மைசூரில் உள்ள குடும்ப நண்பர் ஷியாம், பாம்பு பிடிப்பதில் வல்லவர். அவரிடம், பாம்பு பிடிக்கும் முறையை கற்று, நானும் சில இடங்களில் பாம்பு பிடித்திருக்கிறேன்.இப்படியாக, சின்ன வயதில் இருந்தே செல்லப்பிராணிகளுடன், உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கிறது.விலங்குகளின் உலகம்மிகப்பெரியது. அவைகள் வாழ்வதற்கான சூழலை, மனிதர்கள் தான் சுரண்டிவிட்டோம்.
தற்போது அடிக்கடி வெளியூர் செல்வதாலும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததாலும், செல்லப்பிராணி வளர்க்கமுடியவில்லை.உயிருள்ளஒரு ஜீவனைவீட்டிற்குள் அனுமதிக்கும் போது, அதற்கான சூழலை அமைத்து தருவதோடு, முறையாக பராமரிப்பது அவசியம். இருப்பினும்எதிர்காலத்தில் விலங்குகள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை அமைத்து தர வேண்டுமென்ற திட்டம் உள்ளது.