sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

தி.மு.க., கூட்டத்துல கொடுத்தாங்க பை; ஜனங்ககிட்ட ஆதரவு அள்ளுனாரு 'மலை'

/

தி.மு.க., கூட்டத்துல கொடுத்தாங்க பை; ஜனங்ககிட்ட ஆதரவு அள்ளுனாரு 'மலை'

தி.மு.க., கூட்டத்துல கொடுத்தாங்க பை; ஜனங்ககிட்ட ஆதரவு அள்ளுனாரு 'மலை'

தி.மு.க., கூட்டத்துல கொடுத்தாங்க பை; ஜனங்ககிட்ட ஆதரவு அள்ளுனாரு 'மலை'


ADDED : டிச 24, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த மித்ரா, காய்கறி கூடையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

''என்னப்பா... சிட்டிக்குள்ள என்ன ஸ்பெஷல்...'' என, பேச்சை ஆரம்பித்தாள் சித்ரா.

''சிட்டிக்குள்ள எந்த ரோட்டுல போனாலும், குண்டும் குழியுமா இருக்கு; ஸ்கூட்டர்ல போனா, பெண்டு நிமிறுது. ஆளுங்கட்சிக்காரங்க 'மீட்டிங்' போட்டா, நம்மூருக்கு கோடி கோடியா நிதி ஒதுக்குறதா சொல்றாங்க. இன்னமும் ரோடு குழியாதான் இருக்குது,''

''மறுபடியும், 200 கோடி ரூபாய் ஒதுக்கப் போறதா சி.எம்., அறிவிச்சாரே...''

''அதையேன் கேக்குறீங்க. கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் தரப்புல, 'எஸ்டிமேட்' தயாரிச்சு பைல் எடுத்துக்கிட்டு சென்னைக்கு போயி, 'கேம்ப்' அடிச்சாங்க. இப்போதைக்கு, 100 கோடி ரூபாய் தர்றோம்னு சொல்லியிருக்காங்க; மீதமுள்ள, 100 கோடியை அடுத்த கட்டமா தர்றோம்னு, தட்டி விட்டுட்டாங்களாம்,''

''நிதி கொடுக்கறது இருக்கட்டும். கொடுக்கற தொகைக்கு, தரமா ரோடு போட்டா நல்லாயிருக்குமே; ஒரு மாசத்திலேயே மறுபடியும் 'டேமேஜ்' ஆகிடுது. திரும்ப, திரும்ப எதுக்கு நிதி கேக்குறாங்கன்னு தலைமை செயலகத்துல இருக்கற ஆபீசர்ஸ்சும், யோசிக்கவே மாட்டாங்க போலிருக்கு...''

'சவுண்டு' கொடுத்த லேடி


''அதெல்லாம் இருக்கட்டுங்கா... நம்மூருக்கு சி.எம்., வந்தாரு; டெபுடி சி.எம்., வந்தாரு; அண்ணாமலையும் வந்துட்டு போயிருக்காரு... அதைப்பத்தி சொல்லுங்களேன்...''

''முன்னாள் எம்.பி., இரா.மோகன் வீட்டுக்கு சி.எம்., வந்தாரு. பாதுகாப்பு பணியில இருந்த போலீஸ்காரங்க ஏகப்பட்ட கெடுபிடி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மேயரையும், கவுன்சிலரையும் கூட வீட்டுக்குள்ள விடலை.

மாவட்ட செயலாளர்களை மட்டும் அனுமதிச்சாங்க. மேயருக்கு இவ்ளோதான் மரியாதையான்னு பத்திரிகையாளர்கள் கேட்டதும், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் வெளியே வந்து, மேயரை அழைச்சுட்டு போயிருக்காரு,''

''அக்கா... இதே மாதிரியே... சூலுார் நிகழ்ச்சியிலயும் நடந்திருக்கு. அங்க மினிஸ்டர்கள் சிவசங்கரன், செந்தில்பாலாஜி தலைமையில, தாழ்தள சொகுசு பஸ்கள் துவக்க விழா நடந்துச்சு; கட்சிக்காரங்க, தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவங்க கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. 'டிரான்ஸ்போர்ட்' மினிஸ்டர்கிட்ட மனு கொடுக்க, ஒரு லேடி ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தாங்க. அவர் மேடைக்கு போக கட்சிக்காரங்களும், ஆபீசர்களும் அனுமதிக்கலை,''

''அந்த லேடி கோபத்தோட, 'என்னங்க... மனு கொடுக்கக் கூட அனுமதிக்க மாட்டீங்களா'ன்னு 'சவுண்டு' கொடுக்க, மினிஸ்டர் கவனிச்சிட்டார். அந்த லேடியை மேடைக்கு கூப்பிட்டு, விஷயத்தை கேட்டு மனு வாங்குனாரு. மேடையில இருந்து மினிஸ்டர்ஸ் கீழே இறங்கியதும் தள்ளுமுள்ளானது. அவுங்க பக்கத்துல போறதுக்கு, மேயரும் ரொம்ப சிரமப்பட்டார்; அந்தளவுக்கு கட்சிக்காரங்க ஆதிக்கம் அதிகமா இருந்துச்சு...''

ஒன்லி குரூப் போட்டோ


''டெபுடி சி.எம்., உதயநிதி தலைமையில நடந்த கூட்டத்துல என்ன நடந்துச்சாம். உடன்பிறப்புகள்கிட்ட மலர்ச்சியே இல்லையாமே...''

''அதுவா... 27 சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தாங்களாம். சில பேரு கூட்டத்துக்கு வரலையாம். ஒவ்வொரு அணியை சேர்ந்தவங்களும், தலா அஞ்சு பூத்துக்கு பொறுப்பு ஏத்துக்கணும்னு சொல்லியிருக்காங்களாம். அதுக்கப்புறம் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமா அறிவுறுத்தல் வரும்னு சொல்லியிருக்காங்க.''

''கூட்டத்துல கலந்துக்கிட்ட எல்லோருக்கும், ஒரு பை கொடுத்திருக்காங்க. ஒரு புத்தகம் இருந்திருக்கு; தி.மு.க., ஆட்சியில செய்ற திட்டங்களை குறிப்பிட்டு இருக்காங்களாம். புத்தகத்தை படிச்சுப்பார்த்து, ஓட்டு கேட்டு போற இடத்துல சொல்லணுமாம்.

கொஞ்ச நேரத்துலேயே 'மீட்டிங்' முடிஞ்சிருச்சு; ஒவ்வொரு அணியை சேர்ந்தவங்களையும் கூப்பிட்டு, குரூப் போட்டோ எடுத்தாங்களாம். சார்பு அணியை சேர்ந்தவங்க மனசுல இருக்கறதை பேசுறதுக்கு, வாய்ப்பு கொடுக்கலைன்னு உடன்பிறப்புகள் சொன்னாங்க...,''

போஸ்ட்டிங்கிற்கு கரன்சி


''ஆமா, மித்து... ஆளுங்கட்சிக்காரங்ககிட்டயே லட்சக்கணக்குல கரன்சி கேட்டா... அவுங்களுக்கு கோபம் வருமா... வராதா...''

''அப்படி என்னக்கா... நடந்துருக்கு...''

''மித்து... கவர்மென்ட் ஆபீசுல வேலைபார்க்கற சொந்தக்காரங்களுக்கு, 'டிரான்ஸ்பர்', ரேஷன் கடையில சேல்ஸ்மேன் வேலை கேட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும், மாவட்ட நிர்வாகிகளையோ அல்லது கட்சி தலைமைக்கோ போயி முறையிடுறாங்க,''

''ஆளுங்கட்சியை சேர்ந்தவங்களா இருந்தாலும், கரன்சி வெட்டச் சொல்றாங்களாம். 'டிரான்ஸ்பர்'ன்னா அஞ்சு லட்சம்; ரேஷன் கடை வேலைக்குஆறு லட்சம் கேக்குறாங்களாம்.

'ஆளுங்கட்சியில முக்கியப் பொறுப்புல இருக்கோம்னு, ஊருக்குள்ள கெத்தா சொல்றோம். கட்சிக்காக, 25 வருஷமா உழைச்சிட்டு இருக்கோம்.

ஆனா, கரன்சி கொடுக்காம சொந்தக்காரங்களுக்கு கூட 'டிரான்ஸ்பர்' வாங்கிக் கொடுக்க முடியலையே'ன்னு, பலரும் வெளிப்படையா புலம்புறாங்க... அதனால, ஆளுங்கட்சின்னு சொல்லிட்டு, கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் போறதுக்கே, நிர்வாகிங்க தயங்கறாங்களாம்...''

போஸ்டிங் வாங்க குறுக்கு வழி


'''நார்த் ஜோன்ல உயரதிகாரி பதவியை பறிக்கிறதுக்கு, லேடி ஆபீசர் ஒருத்தரு, ஆளுங்கட்சியை சேர்ந்த சொந்தக்காரர் ஒருத்தர் உதவியை நாடியிருக்காராம்...''

''கிருஷ்ணா காலனி 'ரிசர்வ் சைட்' விவகாரத்துல, ஏற்கனவே சிக்கல்ல மாட்டிட்டு முழிக்கிற அந்த லேடி ஆபீசருக்கு, பதவி உயர்வை 'கவர்மென்ட்' நிறுத்தி வச்சிருக்கு. இப்போதைக்கு உயர்ந்த பதவிக்கு வர முடியாதுங்கிறதை உணர்ந்த அந்த ஆபீசர், குறுக்கு வழியில 'இன்சார்ஜ் போஸ்டிங்' வாங்குறதுக்கு, காய் நகர்த்திட்டு இருக்காராம். இதையெல்லாம்... கமிஷனர் கண்டுக்கறதே இல்லையாம்,''

கட்டணம் ஜாஸ்தி


''மாவட்ட நிர்வாகம் தரப்புல, கொஞ்ச நாளா அதிரடி நடவடிக்கை எதுவும் காணோமே,''

''ஆமாக்கா... உதாரணத்துக்கு, நம்மூர்ல இருக்கற சினிமா தியேட்டர்கள்ல, இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறாங்க; கவர்மென்ட் நிர்ணயிச்சதை விட எக்குத்தப்பா வாங்குறாங்க. அன்னுார் ஏரியாவுல, 'ஏசி' இல்லாத தியேட்டர்கள்ல, அதிகபட்சம் 80 ரூபாய், 'ஏசி' இருக்கற தியேட்டர்கள்ல, 100 ரூபாய் வசூலிக்கணும்.

ஆனா, அதிகபட்சமா 190 ரூபாய், குறைந்த பட்சமா 170 ரூபாய் வாங்குறாங்க. தாலுகா ஆபீசுல ஆரம்பிச்சு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் 'கம்ப்ளைன்ட்' சொல்லிட்டாங்க; கவர்மென்ட் ஆபீசர்ஸ் தரப்புல இதுவரைக்கும் ஆக்சனும் இல்லை; ரியாக்சனும் இல்லையாம்,'

வெளுத்த மினிஸ்டர்


''அதெல்லாம் இருக்கட்டும்... நம்மூர்ல எஜூகேசன் மினிஸ்டர் 'ரெவ்யூ மீட்டிங்' நடத்துனாரே... டிபார்ட்மென்ட் ஆபீசர்களை, வெளுவெளுன்னு வெளுத்துட்டாராமே...''

''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். பர்ஸ்ட் நாள் நிகழ்ச்சியில மட்டும் மினிஸ்டர் கலந்துக்கிட்டாரு. 'ஒங்க சுயநலத்துக்காக... பழியுணர்ச்சிக்காக, ஒங்க கூட வேலைபார்க்குறவங்களை... அவுங்களுக்கே தெரியாம வீடியோ எடுத்து, சமூக வலைதளத்துல பரப்பி, கவர்மென்ட்டுக்கு ஏன் அவப்பெயரை ஏற்படுத்துறீங்கன்னு கேட்டிருக்காரு.

இது மாதிரியான பேச்சை, ஆபீசர்ஸ் எதிர்பார்க்கலையாம்... இந்த வருஷம்... கல்வியில பின்தங்கி இருக்கற மாவட்டத்தை சேர்ந்தவங்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிச்சு காட்டணும்னு கெடுபிடியா சொல்லியிருக்காராம்''

அண்ணாமலைக்கு ஆதரவு


''அண்ணாமலை விசிட்டை பத்தி எதுவும் சொல்லலையே...''

''அதுவா... கருப்பு தின பேரணியில பொங்கி எழுந்துட்டாரு. அவரோட பேச்சு, நம்மூர் ஜனங்ககிட்ட நல்ல வரவேற்பை ஏற்படுத்தி இருக்குதாம். பி.ஜே.பி.,காரங்க பேரணி நடத்த அனுமதி கொடுக்காம 'அரெஸ்ட்' செஞ்சு, வழக்கு போட்டாங்க... ஆனா, அதே நாள்ல, கம்யூ., கட்சிக்காரங்க நைட் நேரத்துல பேரணி நடத்தியிருக்காங்க; போலீஸ்காரங்க பாதுகாப்பு கொடுத்திருக்காங்க... இப்படி... பாரபட்சம் காட்டுறதை நடுநிலையாளர்கள் விரும்பலையாம்...பேரணி நடத்துனதுல இருந்த நியாயத்தை உணர்ந்து, நம்மூரு ஜனங்க சப்போர்ட், அண்ணாமலைக்கு அதிகரிச்சிருக்காம்,'' என்றபடி, 'லேப்-டாப்'பை 'ஆன்' செய்து, இணையத்தில் தகவல் தேட ஆரம்பித்தாள் மித்ரா.

'அறம்' புத்தகத்தில், படிக்காமல் விட்ட மீதமுள்ள கதைகளை படிக்க ஆரம்பித்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us