sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

'மஞ்ச சட்ட' ஆளு ஆட்டுறாரு வாலு; குற்றவாளியை மறைக்க போலீஸ் குடுக்குது டவலு

/

'மஞ்ச சட்ட' ஆளு ஆட்டுறாரு வாலு; குற்றவாளியை மறைக்க போலீஸ் குடுக்குது டவலு

'மஞ்ச சட்ட' ஆளு ஆட்டுறாரு வாலு; குற்றவாளியை மறைக்க போலீஸ் குடுக்குது டவலு

'மஞ்ச சட்ட' ஆளு ஆட்டுறாரு வாலு; குற்றவாளியை மறைக்க போலீஸ் குடுக்குது டவலு


ADDED : ஜூலை 21, 2025 10:58 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகர் வலம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் சித்ரா.

காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''கொடிசியாவுல நடக்குற புத்தக கண்காட்சிக்கு போயிருந்தீங்களே... எப்படி இருக்கு...'' என, ஆரம்பித்தாள்.

''நல்லாயிருக்கு மித்து! போன வருஷமே, 90 ஆயிரத்துக்கு மேல பார்வையாளர்கள் வந்திருந்தாங்க. இந்த வருஷம் லட்சத்தை தாண்டும்னு எதிர்பார்க்குறாங்க. சென்னைக்கு அடுத்தபடியா, நம்மூர்ல 'புக் பிசினஸ்' அதிகமா இருக்கு.

''குழந்தைங்களுக்கு கல்வி சார்ந்த அறிவியல் உபகரணங்களும் ஸ்டால் போட்ருக்காங்க. அரசு பள்ளி மாணவர்களை பஸ் வச்சு அழைச்சுட்டு வரப்போறதா சொன்னாங்க,''

''கார்ப்பரேஷன் ஸ்கூல்ல, டாய்லெட் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்களாமே...''

''நம்ம கார்ப்பரேஷன்ல, எஜூகேஷன் டிபார்ட்மென்ட்டுக்கு கோடிக்கணக்குல நிதி ஒதுக்குறாங்க. தேவையான ஸ்கூல்கள்ல, கூடுதல் வகுப்பறை கட்டுறாங்க. சித்தாபுதுார் ஸ்கூல்லயும் ஒர்க் நடக்குது.

ஸ்டூடண்ட்ஸ்க்கு டாய்லெட் கட்டிக் கொடுத்துட்டாங்க; டீச்சர்ஸ்க்கு தனியா கட்டணும். அந்த டாய்லெட் கட்டிக் கொடுக்காம, கான்ட்ராக்டர் இழுத்தடிக்கிறாரு. அந்த ஏரியா ஏ.இ., 'ஆக்டிவ்'வா செயல்படுறதில்லைன்னு, டீச்சர்ஸ் புலம்புறாங்க...''

கான்ட்ராக்ட்... கமிஷன் ''அதெல்லாம் இருக்கட்டும். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருத்தரு, கவர்மென்ட் கான்ட்ராக்ட் வாங்கிக் கொடுத்து, கமிஷன் பார்க்குறாராமே... யாருங்க அவரு...''

''அவரா... நம்மூருக்கு எந்த மினிஸ்டர் வந்தாலும், ஏர்போர்ட்டுல இருந்து கூடவே நிழல் போல வருவாரு; சில சமயங்கள்ல மினிஸ்டர்களோட, அவுங்க கார்லயே போவாரு. எப்பவும் 'மஞ்சள் கலர்' சட்டை போட்டிருப்பாரு. இப்போ, யாரைச் சொல்றேன்னு புரிஞ்சிருக்குமே... அவர் ரெகமண்டேஷன் செஞ்சா, கார்ப்பரேஷன், ஹைவேஸ் டிபார்ட்மென்ட்டுல, 'ஒர்க்' ஒதுக்குறாங்க.

அவரு, கவர்மென்ட்டுல பதிவு செஞ்ச கான்ட்ராக்டர் இல்லையாம். கான்ட்ராக்ட் எடுத்தவர்கிட்ட, 10 'பர்சன்ட்' கமிஷன் வாங்குறாராம். கமிஷன் கொடுக்கலைன்னா, கான்ட்ராக்டர்சை நிம்மதியா இருக்க விடுறதில்லையாம்; 'டார்ச்சர்' செஞ்சு பாடாய்படுத்துறாராம்...''

விஜிலென்ஸ் வழக்கு ''கார்ப்பரேஷன் ஆபீசர் மேல, விஜிலென்ஸ்காரங்க சொத்து குவிப்பு வழக்கு பைல் செஞ்சிருக்காங்களே... என்னாச்சு...''

''ஆமாப்பா... அதைக்கேட்டு, கார்ப்பரேஷன் வட்டாரமே ஆடிப் போயிருக்கு. இதுவரைக்கும் எந்த ஆபீசர் மேலயும், சொத்து குவிப்பு வழக்கு போடலை; இதுவே, 'பர்ஸ்ட் டைம்'னு சொல்றாங்க. வருமானத்தை விட, 182 சதவீதம் ஜாஸ்தியா சொத்து சேர்த்திருக்கான்னு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க.

இதெல்லாம், லீகலா காட்டுன கணக்குல இவ்ளோ சொத்து இருக்கு. இல்லீகலா எவ்ளோவ் சம்பாதிச்சிருப்பாருன்னு, கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் கணக்குப் போட்டு பார்த்து மலைச்சுப் போயிருக்காங்க.

அவரு மேல கார்ப்பரேஷன்ல, இன்னும் டிபார்ட்மென்ட் ஆக்சன் எடுக்காம இருக்காங்க. லஞ்சம் வாங்குறவங்களை கார்ப்பரேஷன் ஹைஆபீசர் ஏன் காப்பாத்துறார்னு புரியாம, உளவுத்துறை போலீஸ்காரங்க தவிக்கிறாங்க...'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.

'முகங்கள்' மறைப்பு ''குற்றவாளிகள்னு தெரிஞ்சும், கோர்ட் தண்டனை அறிவிச்சும் கூட, அவுங்க முகத்தை மறைக்கிறதுக்கு, போலீஸ் ஆபீசர்ஸ் உடந்தையா இருக்காங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

ஹெல்மெட் அணிந்து கொண்டு, தோளில் ஜோல்னா பை போட்டுக் கொண்டு, நகர்வலத்துக்கு கிளம்பிய சித்ரா, ''ஆமா... நீ சொல்றது சரிதான். 'பாம் பிளாஸ்ட்' கேஸ்ல ரொம்ப வருஷமா தலைமறைவா இருந்த, குற்றவாளியை அரெஸ்ட் பண்ணி, கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க; அவரோட முகத்தை மறைச்சிட்டாங்க,''

''அப்புறம், சிறுமியை பாலியல் பலாத்காரம் செஞ்ச வழக்குல, ஏழு பேருக்கு கோர்ட்டுல தண்டனை கொடுத்தாங்க. அவுங்கள ஜெயிலுக்கு கூட்டிட்டு போறப்பவும், கர்ச்சிப் வச்சு சிலர் முகத்தை மறைச்சாங்க; சிலருக்கு போலீஸ்காரங்களே டவல், மாஸ்க்லாம் கொடுத்திருக்காங்க.

பல தரப்புல இருந்து அழுத்தம் கொடுத்த பிறகே, அவுங்க போட்டோக்களை போலீஸ் தரப்புல ரிலீஸ் செஞ்சாங்க. குற்றவாளிகள்னு முடிவான பிறகு, எதுக்கு காப்பத்துறாங்க. அவுங்களுக்கும் போலீஸ்காரங்களுக்கும் என்ன 'லிங்க்'னு, கோர்ட் வளாகத்துல பலரும் பேசிக்கிட்டதை கேட்க முடிஞ்சது...''

காட்டுக்குள்ள பூஜை ''மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி, மறுபடியும் மினிஸ்டராகணும்னு ஆளுங்கட்சி தரப்புல சிறப்பு பூஜை செஞ்சாங்களாமே...'' என, சப்ஜெக்ட்டை மாற்றினாள் மித்ரா.

''அதுவா... சிறுவாணி அடிவாரத்துல பழங்குடியின மக்கள் வழிபடுற, காட்டுக் கோவிலுக்கு உடன்பிறப்புகள் போயி, அர்ச்சனை பண்ணியிருக்காங்க. செந்தில்பாலாஜி தரப்புல சுப்ரீம் கோர்ட்டுல மனு போட்டிருக்காங்க; சட்ட சலுகை கெடைக்கும்னு, ஆளுங்கட்சிக்காரங்க எதிர்பார்க்குறாங்க.

ரத்தத்தின் ரத்தங்கள் குஷி ''இ.பி.எஸ்., பிரசாரத்துக்கு பின்னாடி, ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவே உற்சாகமாயிட்டாங்களாமே...''

''ஆமா, மித்து! எந்த ஊருக்கு போனாலும் கூட்டம் அலைமோதுது. நாலு வருஷமா 'ஆக்டிவ்'வா இல்லாம முடங்கியிருந்த கட்சிக்காரங்களை, தட்டி எழுப்பிட்டாங்க. இனி, நம்ம ஆட்சி தாங்கன்னு வெளிப்படையா பேச ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம டிஸ்ட்ரிக்ட்ல நாலு தொகுதியில பிரசாரம் செஞ்சிருக்காரு; இன்னும் ஆறு தொகுதி பாக்கி. அடுத்த ரவுண்டுல தொண்டாமுத்துார் ஏரியாவுக்குள்ள இ.பி.எஸ்., நுழையும்போது, ஆளுங்கட்சிக்காரங்க மிரள்ற அளவுக்கு ஏற்பாடு செய்றதுக்கு, பிளான் பண்ணிட்டு இருக்காங்களாம்...''

ஆளுங்கட்சியினர் போர்க்கொடி ''இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன்... ஆளுங்கட்சியை சேர்ந்த பேரூராட்சி சேர்மனுக்கு எதிரா கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்குறாங்களாமே...''

''ஆமாப்பா... கார்ப்பரேஷனை ஒட்டியிருக்குற, இருகூர் பேரூராட்சியில சேர்மனுக்கு எதிர்ப்பு கெளம்பி இருக்கறதா சொல்றாங்க. வார்டுக்குள்ள எந்த வேலையும் உருப்படியா நடக்கறதில்லை; பல இடங்கள்ல முடங்கி இருக்கு. எதுக்குமே சேர்மன் 'ஒத்துழைப்பு' கொடுக்கறதில்லைன்னு ஆளுங்கட்சி 'மாவட்டத்தைச்' சந்திச்சு, ஆதங்கத்தை கவுன்சிலர்கள் கொட்டியிருக்காங்க.

இந்த பேரூராட்சியில மொத்தம், 18 கவுன்சிலர்கள் இருக்காங்க; 14 பேர் போர்க்கொடி ஏந்தியிருக்காங்க. நிர்வாக ரீதியா இன்னும அழுத்தம் கொடுத்தா, சேர்மனை மாத்த வேண்டிய சூழல் வரும்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க...''

எஸ்.ஐ., ஆட்டம் ''லேடி ஒருத்தரு ரொம்ப 'ஆட்டம்' போடுறதா... கமிஷனர் ஆபீசுல பேச்சு ஓடுதே...''

''அவுங்களா.... சிங்காநல்லுார் ஸ்டேஷன்ல போக்குவரத்து பிரிவுல இருக்காங்க... சக போலீஸ்காரங்களை மதிக்கறதே இல்லையாம். நேரடி நியமனங்கிறதுனால ராங்கா நடந்துக்கிறாராம். லேடி போலீஸ்காரங்க, லீவு கேட்டா கொடுக்கறதில்லையாம். போக்குவரத்து சம்பந்தமான கேஸ்கள்ல கரன்சிய பறிக்கிறாராம்.

லைசென்ஸ் இல்லாம வர்றது; போதையில வண்டி ஓட்டிட்டு வர்றவங்களை பிடிச்சா, கேஸ் போடாம இருக்கறதுக்கு, பெரிய 'அமவுன்ட்' பிடுங்குறாராம்,''

உத்தரவுக்கு மதிப்பில்லை ''கூட்டுறவு சங்க பதிவாளரே உத்தரவு போட்டும் டிரான்ஸ்பர்ல போகாம, நம்ம டிஸ்ட்ரிக்ட்டை சேர்ந்த செகரட்டரீஸ் கெத்துக் காட்டுறாங்களாமே...''

''அதுவா... 2019ல, கூட்டுறவு சங்க செயலாளர்களை, காமன் கேடர்ல கொண்டு வந்துட்டாங்க. மூணு வருசத்துக்கு மேல ஒரே இடத்துல செயலாளர்களா வேலை பாக்கறவங்கள இடமாறுதல் செய்யணும்.

செயலாளர்களோ, உதவி செயலாளர்களோ தாய் சங்கத்திலோ, சொந்த ஊரிலோ பணியில் இருக்கக்கூடாதுனு, உத்தரவு போட்டுருக்காங்க. இதை, மே 31க்குள்ள டிரான்ஸ்பர் செஞ்சு, அறிக்கை சமர்ப்பிக்கணும்னு, அந்த உத்தரவுல சொல்லிருக்கு,''

''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல மட்டும் விதிவிலக்கு போல. நிறைய செயலாளர்கள், 20ல இருந்து, 25 வருசமா சொந்த ஊர்லயே வேலை பாக்குறாங்க; தாய் சங்கத்திலும் இருக்காங்க. பணிமாறுதலே இல்லாம, அதிகாரிங்க துணையோட, கெத்துக் காட்டுறாங்க. பதிவாளரோட உத்தரவுக்கு என்ன மதிப்பு?

யாரை 'கவனிச்சு' அதே இடத்துல வேலை பாக்குறாங்கனு தெரியலைன்னு, கூட்டுறவு சங்க ஊழியர்கள் கொந்தளிக்கறாங்க...'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

பின் இருக்கையில் அமர்ந்து, மொபைல் போனை நோண்ட ஆரம்பித்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us