sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

வாக்குறுதி விவ' காரம் '; இறுதி வரை 'காரசாரம்'

/

வாக்குறுதி விவ' காரம் '; இறுதி வரை 'காரசாரம்'

வாக்குறுதி விவ' காரம் '; இறுதி வரை 'காரசாரம்'

வாக்குறுதி விவ' காரம் '; இறுதி வரை 'காரசாரம்'


UPDATED : ஜூன் 11, 2024 04:13 AM

ADDED : ஜூன் 11, 2024 12:29 AM

Google News

UPDATED : ஜூன் 11, 2024 04:13 AM ADDED : ஜூன் 11, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மித்து... எலக்ஷன் ரிசல்ட் வந்ததுக்கப்புறம் இப்பத்தானே 'மீட்' பண்றோம்; மீண்டும் சுப்பராயனே எம்.பி.,யாயிட்டாருல்ல''

''என்னதான் ஜெயிச்சாலும் ஓட்டு சதவீதம் குறைஞ்சுபோச்சே, சித்ராக்கா''

''ஆமாமா... ஆனா திருப்பூர் வடக்குத் தொகுதில அ.தி.மு.க., ஓட்டு சதவீதமும் சர்ர்ர்னு இறங்கிருச்சுங்கறதுனால தி.மு.க.,காரங்க குஷிப்படறாங்க... சுப்பராயன், ஜெயிச்ச பின்னாடி, வாக்குறுதி கொடுக்க மாட்டேன்னு சொல்லியிருக்காரே, மித்து...''

''ஆமாக்கா... அதானே அவங்க பாணி... ஆட்சில அவங்க இல்லாததுனால, வாக்குறுதி கொடுக்க மாட்டோம்னு சொல்றாரு... ஆனா தொகுதிக்கான பிரச்னைன்னு வந்துட்டா களத்துல இறங்கிருவோம்னுதான் எப்பவும் கம்யூ., கட்சிக் காரங்க சொல்றாங்க...''

''மித்து... பா.ஜ.,காரங்க தான் ரொம்ப சோர்ந்து போயிட்டாங்கல்ல...''

''பின்ன இருக்காதா... பிரசாரத்தைத் தீவிரமாத்தான் முன்னெடுத்தாங்க...''

''அதுக்கேத்த மாதிரி ஓட்டு சதவீதம் பரவால்லதானே...''

''இருந்தாலும் ஜெயிச்சுக்காட்டுனாதானே மவுசு...''

''ஆமா மித்து... ஆனா, பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், நாங்க சொன்ன வாக்குறுதிகளை, நாங்க ஜெயிக்கலேன்னாலும், பிரதமரா மோடி வந்ததுனால, நிறைவேற்ற முயற்சிப்போம்னு வாக்குறுதி கொடுத்துருக்காரே''

''அடடே...இது நல்லா இருக்கே... சுப்பராயன் வாக்குறுதி தராட்டியும், முருகானந்தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவாராம்... ''

''மித்து... இதுதான் இப்ப திருப்பூரோட 'டாக்'காம். சொல்றது ஈசிதான். செய்யலேன்னா கஷ்டமாயிடும். வாக்குறுதி விவகாரம், அடுத்து வர்ற சட்டசபைத் தேர்தல்லயே கூட எதிரொலிக்கும். அடுத்த லோக்சபா தேர்தல் வரைக்கும்கூட நீடிக்கும். இது எந்தக்கட்சிக்கு எதிர்வினையாக அமையுமோ, தெரியல...''

''ஹண்ட்ரெட் பெர்சென்ட்'' என்றாள் மித்ரா, புன்னகை பூக்க.

மீசையில் ஒட்டாத மண்


''மித்து... திருப்பூர்ல அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைஞ்சாலும் லோக்சபா தேர்தல்ங்கறதுனால நடுநிலை ஓட்டுகள் இந்தத் தடவை பா.ஜ., பக்கம் போயிருக்கலாம்... சட்ட சபைத் தேர்தல்ல, இந்த ஓட்டுகள் மீண்டும் அ.தி.மு.க., வசமாயிடும்னு அ.தி.மு.க.,காரங்க மார் தட்டுறாங்க...''

''சித்ராக்கா... இவங்க சொல்றது, மீசைல மண்ணு ஒட்டலேங்கற மாதிரிதான்...''

''மித்து... அ.தி.மு.க., வேட்பாளருக்காக, தே.மு.தி.க.,காரங்க ஓட்டு சேகரிச்சாங்க... அ.தி.மு.க., தரப்புல இருந்து தே.மு.தி.க., மாவட்டப் பொறுப்பானவருக்கு 'வைட்டமின் ப' கொடுத்தாங்களாம். ஆனா, 'வைட்டமின் ப'வை மொத்தமா அமுக்கிட்டாராம்.

''கூட்டத்துக்கு ஆட்களை அழைச்சு வந்தவுங்களுக்குக் கூட பணம் கொடுக்கலையாம். கைக்காசப் போட்டுத்தான் நிர்வாகிங்க கொடுத்துருக்காங்க...

''மூனு வேன் பிடிச்சு, தே.மு.தி.க., காரங்க சென்னைக்குப் போய், கட்சித் தலைமைகிட்ட இதப்பத்தி புகார் கொடுத்தாங்களாம்... விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம்னு உறுதி சொன்னதால, சந்தோஷமா திரும்பி வந்திருக்காங்க...''

''சித்ராக்கா... காசேதான் உலகமடா''

கலகலத்தாள் மித்ரா.

டுமீலுக்கு அதிக 'பாஸ்'


''சித்ராக்கா... எல்.ஆர்.ஜி., காலேஜ்ல ஓட்டு எண்ணுனாங்கல்ல... செய்தி சேகரிக்க யூடியூபர்ங்க, வெளிவராத பத்திரிகையோட நிருபருங்கன்னு செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் தாராளமா பாஸ் வழங்கிட்டாங்க...

''இவங்க வழக்கம்போல மொபைல்போனைத் துாக்கிட்டு வந்துட்டாங்க... ஓட்டு எண்ணிக்கை அரங்கில மொபைல்போனுக்கு அனுமதி கிடையாது... வீடியோ கேமரா மட்டும்தான் அனுமதிச்சாங்க...

''யூடியூபருங்களும், டுமீல் பத்திரிகைக்காரங்களும் ஊடக அறையில 'ரெஸ்ட்' எடுத்தாங்க... 'டிவி'ல வர்ற ஓட்டு எண்ணிக்கை செய்திகளைப் பார்த்து, 'கமென்ட்' செஞ்சு நேரத்தை ஓட்டுனாங்க...

''பெரும்பாலான 'சீட்'களை இவங்களே ஆக்கிரமிச்சதால, பிரதான பத்திரிகையாளர்கள் அமர்றதுக்கோ, லேப்டாப்ல செய்திகளைப் பதிவு செய்றதுக்கோ சிரமப்பட வேண்டியிருந்துச்சு.

''பத்திரிகைக்காரங்களுக்கு மதியம் சிக்கன் பிரியாணி தந்தாங்க... பிரியாணி சாப்பிட்ட கையோடு, 'டுமீல்' நிருபர்கள் பலரும், நடைய கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

''ஆனா பாதுகாப்புக்கு வந்த, போலீஸ்காரங்களுக்கு வெஜ் பிரியாணி, தயிர் சாதம்னு சின்ன டப்பாவுல அடைச்சுத் தந்தாங்களாம். கால் வயித்துக்குக் கூட காணலையாம். ரொம்ப வருத்தப்பட்டாங்க போலீஸ்காரங்க''

மூச்சுவிடாமல் பேசினாள், மித்ரா.

அதிரடி தேவை


''மித்து... சிட்டில, வசூல்ல பட்டய கிளப்புறவங்க, சட்டவிரோதச் செயல்கள் செய்றவங்களுக்கு துணை போற 'காக்கி'ங்க குறித்து 'சிட்டி' அதிகாரி கவனத்துக்குக் கொண்டு போனாலும், அவர் நடவடிக்கை எடுக்குறதில்ல...''

பேச்சை மாற்றினாள் சித்ரா.

''என்ன காரணம்னு விசாரிச்சா, இதேபோல பிரச்னைல சிக்குற போலீஸ் காரங்க குடும்பப் பின்னணிய மனசுல வச்சு, மன்னிச்சு, எச்சரிக்கையோட அனுப்பிச்சுடறாராம்...

''அதிகாரியோட சாந்தமான குணத்தைச் சாதகமாக பயன்படுத்திங்கிறாங்க, இந்தக் 'கருப்பு ஆடு'ங்க... அதிகாரி அதிரடி காட்டுனாருன்னாதான் கொஞ்சமாவது பயம் வரும்னு சொல்றாங்க, நல்ல கரங்களைக் கொண்ட போலீஸ்காரங்க''

யூனிபார்முடன் சரக்கு


சித்ராக்கா... பல்லடத்துல, யூனிபார்மோட வந்த நாலு டிராபிக் போலீஸ்காரங்க, சுடுகாட்டுக்குப் பக்கத்துல உக்காந்து சரக்கு அடிச்சிட்டு, மீன் கொழம்போட சாப்பாட்டை ஒரு கட்டு கட்டியிருக்காங்க.

''இத வேடிக்கை பார்த்த பப்ளிக், சரக்கு அடிச்சிட்டு வண்டி ஓட்டுனா 'பைன்' போடுறாங்க...

''இவங்களே யூனிபார்மோட சரக்கு அடிக்கிறாங்களே... நமக்கு வந்தா மட்டும் தக்காளி சட்னியான்னு, பப்ளிக் கேள்வி கேட்கறாங்களாம்''

சித்ரா தலையசைத்தாள்.

மித்து... பல்லடம் பத்திர ஆபீஸ்ல எந்த வேலையுமே சுறுசுறுப்பா நடக்கிறதில்லைன்னு டாக்குமென்ட் ரைட்டர்ஸ் புலம்புறாங்க.

''சீனியர் கிளர்க்குங்க சொல்றபடிதான் மேலதிகாரிங்களும் கேக்கறாங்களாம்.

ஆறு வருஷத்துக்கு மேல இவங்க ஒரே எடத்தில வேலை பார்க்கிறதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணமாம்''

மித்ரா ஆமோதித்தாள்.

உயரதிகாரிகள் உத்தரவு


''சித்ராக்கா... போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் சஸ்பெண்ட் விவகாரம், அடங்குறதுக்கு முன்னாடி, கிளை 2 அலுவலகத்தில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து தொழிலாளி காய மடைஞ்ச விவகாரம் பத்திக்கிச்சு...

''ஏற்கனவே பேரு டேமேஜ்; இந்த வேலையெல்லாம் யாரு பண்றாங்கன்னு உயரதிகாரிங்க கொந்தளிச்சிட்டாங்களாம்.

அதைக் கண்டுபிடிக்க குட்டி அதிகாரிங்களுக்கு உத்தரவு போட்டிருக்காங்களாம்...''

''அதுக்காக முழுப்பூசணியைச் சோத்துல மறைக்க முடியுமா, மித்து''

''நீங்க சொல்றது கரெக்ட்தாங்க்கா... வழக்கமா சிறப்பு பஸ் இயக்கறதப் பத்தி போக்குவரத்துக்கழகத்துல அறிவிப்பு வெளியிடுவாங்க... ஆனா கடந்த ஞாயித்துக்கிழமை குரூப் -4 தேர்வுக்கு சிறப்பு பஸ் குறித்து அறிவிப்பு வெளியிடாம கமுக்கமா இருந்துட்டாங்களாம்.

''ஞாயித்துக்கிழமைன்னாலே பஸ்களை குறைச்சுடறாங்க... பெரும்பாலான டவுன் பஸ்கள, டீசலை மிச்சப்படுத்துறதுக்காக ஓரங்கட்டி நிறுத்திடறாங்க...

''பஸ் இல்லாம தேர்வு எழுத வந்தவங்க ரொம்பவே சிரமப்பட்டுட்டாங்களாம்''

சித்ரா முகத்தில் வேதனை தெரிந்தது.

''ரொம்ப வேதனைப்படாதீங்கக்கா... இப்ப உங்களுக்கு சூடா இஞ்சி டீ போட்டுத்தர்றேன்... பேசிப்பேசி ரொம்ப டயர்டாயிட்டீங்கக்கா...''

''ஏய்... உன்னை விட நானா அதிகமா பேசிட்டேன்''

இருவரின் சிரிப்புச் சத்தமும் அடங்க சிறிது நேரமானது.






      Dinamalar
      Follow us