ஆடி ‘க்யூ 3’ 2026 ஆல்வீல் டிரைவில் சொகுசு காம்பேக்ட் எஸ்-.யூ.வி.,
ஆடி ‘க்யூ 3’ 2026 ஆல்வீல் டிரைவில் சொகுசு காம்பேக்ட் எஸ்-.யூ.வி.,
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:36 PM

‘அடி’ நிறுவனம், அதன் ‘க்யூ 3’ சொகுசு எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களில் வரும் இந்த காரின் ஆரம்ப விலை, கடந்த ஆண்டை விட ஒன்பது லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் உள்ள சொகுசு கார்களில், ‘ஆல் – வீல்’ டிரைவ் அமைப்புடன் வரும் ஒரே கார் இது. இதில், 2.0 லிட்டர், 4 – சிலிண்டர், டர்போ பெட்ரோல், டி.எப்.எஸ்.ஐ., இன்ஜின் வந்துள்ளது. இந்த இன்ஜினுடன், 7 – ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு 229 கி.மீ., 7.1 வினாடியில் 100 கி.மீ., வேகத்தை எட்டும் திறன் உடையது.
மேட்ரிக்ஸ் எல்.இ.டி., லைட், டி.ஆர்.எல்., பெரிய 'ஹனிகோம் மேஷ்' கிரில், 18 அங்குல அலாய் சக்கரங்கள், புதிய பம்பர்கள் என பல வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உட்புறத்தில், புதிய 13,12 அங்குல டிஸ்ப்ளேக்கள், டேஷ்போர்டு, கன்சோல், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஹெக்சேகனல் ஸ்டீயரிங் வீல், கர்வ்டு டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் கார் இணைப்பு வசதிகள் மற்றும் சார்ஜிங் பேட், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 3 – ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், அடாஸ் பாதுகாப்பு, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 9 காற்று பைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 360 டிகிரி கேமரா, வென்ட்டிலேட்டட் சீட்கள் வழங்கப்படவில்லை.
